Published:Updated:

Tamil News Today: `நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கப்படவில்லை!’ - ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் பேரணி

எதிர்க்கட்சிகள் பேரணி
எதிர்க்கட்சிகள் பேரணி ( ANI )

12-08-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

12 Aug 2021 11 AM

நாடாளுமன்ற வளாகத்திலிருந்து எதிர்க்கட்சிகள் பேரணி!

நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர், பெகாசஸ் விவகாரத்தால் முழுவதுமாக முடங்கியது. 15 நாள்கள் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக, மத்திய அரசு பெகாசஸ் விவகாரத்தில் குறிப்பிட்ட நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை என்ன எழுத்துபூர்வமாக பதிலளித்தது. எனினும், அடுத்தடுத்த நாள்களில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி நீடித்தது. இதைத் தொடர்ந்து நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றம்!
நாடாளுமன்றம்!

இந்தநிலையில், இன்று நாடாளுமன்ற வளாகத்திலிருந்து எதிர்க்கட்சியினர் பேரணியாகச் சென்றனர். ராகுல் காந்தி தலைமையில் பேரணியாகச் சென்ற அவர்கள், கூட்டத்தொடர் முனக்கூட்டியே முடிக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம், பேசிய ராகுல் காந்தி, ``எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கப்படாததால் இன்று நாங்கள் உங்களுடன் (ஊடகங்கள்) பேச இங்கு வெளியே வர வேண்டியிருந்தது. இது ஜனநாயகப் படுகொலை” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு