Published:Updated:

Tamil News Today: பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது!

மோடி
Live Update
மோடி

12-12-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

12 Dec 2021 12 PM

ரஜினிகாந்த் பிறந்தநாள்: வீட்டின் முன்பு ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

நடிகர் ரஜினிகாந்தின் 71-வது பிறந்தநாளை அவரின் ரசிகர்கள் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், ரசிகர்கள் போயஸ் கார்டனில் இருக்கும் ரஜினியின் வீட்டுக்கு வெளியில் அவரை சந்திப்பதற்காக காலை முதலே காத்திருந்தனர். திரளான அளவில் அங்கு குவிந்திருக்கும் ரசிகர்கள், இனிப்புகள் வழங்கி உற்சாக மிகுதியுடன் கொண்டாடி வருகின்றனர்.

12 Dec 2021 8 AM

பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது!

பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு மர்மநபர்களால் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரதமர் மோடியின் (personal) ட்விட்டர் பக்கத்தில் இன்று அதிகாலை, இந்தியாவில் பிட்காயின் அங்கீரிக்கப்பட்டு விட்டதாக ட்வீட் ஒன்று பகிரப்பட்டது. பிட்காயினுக்கு எதிரான நிலைப்பாட்டில் மத்திய அரசு மிகவும் உறுதியாக இருந்து வரும் நேரத்தில், இந்தியாவில் பிட்காயின் அங்கீகரிக்கப்பட்டு விட்டதாக அதுவும் பிரதமரின் கணக்கிலிருந்து வெளியான அந்த பதிவு பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதைத் தொடர்ந்து, அந்த பிட்காயின் ட்வீட் பலராலும் ரீ-ட்வீட் செய்யப்பட்டது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஆனால், அடுத்த சில மணி நிமிடங்களில் அந்த பதிவு மோடியின் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டது. இது தொடர்பாக விளக்கமளித்திருக்கும் பிரதமர் அலுவலக அதிகாரிகள், ``இன்று அதிகாலை திடீரென சிறிதுநேரம் பிரதமரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் பிட்காயினை இந்தியா அங்கீகரித்துவிட்டதாக பதிவிடப்பட்டிருந்து. பின்னர் அது நீக்கப்பட்டது" என்று தெரிவித்தனர். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், ``பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்வி்ட்டர் கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டிருந்தது. ஆனால், அடுத்த சில நிமிடங்களில் இந்த விவகாரம் ட்விட்டர் நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு், உடனடியாக அந்த கணக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது. ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட இந்த இடைப்பட்ட நேரத்தில் பதிவிடப்பட்ட விஷயங்களை யாரும் நம்ப வேண்டாம், ஒதுக்கிவிடுங்கள்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS