Published:Updated:

Tamil News Today: இந்தியாவில் நேற்றைய பாதிப்பைவிட 27% அதிகம் பதிவான கொரோனா ஒரு நாள் பாதிப்பு! - மத்திய சுகாதாரத்துறை

கொரோனா சிகிச்சைப் பிரிவு
Live Update
கொரோனா சிகிச்சைப் பிரிவு

13-01-2022 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

13 Jan 2022 9 AM

நேற்றைய பாதிப்பைவிட 27% அதிகம் பதிவான கொரோனா!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,47,417 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்று பதிவான ஒரு நாள் பாதிப்பைவிட 27% அதிகம். இந்தியாவில் தற்போது 11,17,531 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 84,825 பாதிப்பிலிருந்து மீண்டிருக்கிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 380 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகியுள்ளனர், ஒட்டுமொத்தமாக இந்தியாவில், 4,85,035 பேர் கொரோனா காரணமாக பலியாகியுள்ளனர்.

ஒமைக்ரான் சிகிச்சைப் பிரிவு
ஒமைக்ரான் சிகிச்சைப் பிரிவு

இந்தியாவில் நேற்று 4,868-ஆக இருந்த ஒமைக்ரான் பாதிப்பு ஒரே நாளில் 5,488-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கி்றது!

13 Jan 2022 8 AM

நிபந்தனை ஜாமீன்...  வெளியே வந்தார் ராஜேந்திர பாலாஜி!

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூபாய் 3 கோடி மோசடி வழக்கில் கைதான முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நான்கு வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

``ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்; விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்” என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி இன்று காலை 7:30 மணிக்கு திருச்சி மத்திய சிறையிலிருந்து வெளியே வந்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS