Published:Updated:

Tamil News Today: தமிழக பட்ஜெட் 2021: ``பெட்ரோல் மீதான வரியில் ரூ.3 குறைப்பு; பட்ஜெட்டில் அறிவிப்பு!"

தமிழக பட்ஜெட்
தமிழக பட்ஜெட்

13-08-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

13 Aug 2021 1 PM

தமிழக பட்ஜெட் 2021:

தமிழகத்தில் பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியில் ரூ.3 குறைக்க தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

13 Aug 2021 11 AM

தமிழக பட்ஜெட் 2021: வீடுகட்ட அரசு வழங்கும் மானியம்

2021-2022-ல் ரூ.8,017.41 கோடி மதிப்பில் 2,49,877 வீடுகள் கட்டப்படும். வீடுகட்ட அரசு வழங்கும் மானியம் ரூ.2.76 லட்சமாக உயர்த்தப்படும். சென்னையில் மூன்று இடங்களில் மேம்பாலங்கள் கட்ட ரூ.500 கோடி ஒதுக்கப்படுகிறது. திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையமும் வணிக வளாகமும் கட்டப்படும்

13 Aug 2021 10 AM

தமிழக பட்ஜெட் 2021: தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.80.26 கோடி

தமிழக பட்ஜெட்
தமிழக பட்ஜெட்

கீழடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும். கீழடி, சிவகளை, கொடுமணல் ஆகிய அகழாய்வுப் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தலங்களாக அறிவிக்கப்படும். தொல்லியல்துறைக்கு ரூ.29.43 கோடியும், தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.80.26 கோடியும் ஒதுக்கீடு.

13 Aug 2021 10 AM

தமிழக பட்ஜெட் 2021: தமிழக பட்ஜெட் தாக்கல் தொடங்கியது! அதிமுக வெளிநடப்பு!

``ஒரே ஆண்டில் செய்து முடிக்க முடியாத அளவுக்குக் கடுமையான பணிகள் உள்ளன. நிதிநிலையைச் சரிசெய்ய இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகும்.’’ - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

13 Aug 2021 8 AM

Tamil News Today: தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக இ-பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு, கடந்த 10 ஆண்டுகளி்ல் தமிழகத்துக்கு ஏற்பட்ட கடன் சுமை தொடர்பான வெள்ள அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில் இன்று இ- பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இன்று பொது பட்ஜெட்டும், நாளை விவசாயத்துக்கென தனி பட்ஜெட்டும் வெளியிடப்படவிருக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு