Published:Updated:

Tamil News Today: புனரமைக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

காசியில் மோடி
Live Update
காசியில் மோடி

13-12-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

13 Dec 2021 2 PM

புனரமைக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

வாரணாசியில் புனரமைக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். இதற்காக உத்தரப்பிரதேசம் சென்ற பிரதமர் மோடி, கங்கை நதியில் புனித நீராடினார். பின்னர், அங்கிருந்து அவரின் சொந்தத் தொகுதியான வாரணாசியில், சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டிருக்கும் பிரிசித்திபெற்ற காசி விஸ்வநாதர் கோயிலின் வளாகத்தைத் திறந்துவைத்தார்.

கங்கையில் நீராடிய மோடி
கங்கையில் நீராடிய மோடி
மோடி
மோடி
காசி கோயில்
காசி கோயில்

இந்தப் புனரமைப்பு திட்டத்தின் மூலம், கங்கை நதிக்கரையிலிருந்து காசி கோயிலை இணைக்கும் வகையில், லலிதா படித்துறையிலிருந்து காசி விஸ்வநாதர் கோயில் வரை 320 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும்கொண்ட நடைபாதை அமைக்கப்பட்டிருக்கிறது.

13 Dec 2021 9 AM

முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் வருகிற 15-ந்தேதியுடன் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருகிறது. மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்துவந்தாலும், உருமாறியுள்ள ஒமைக்ரான் பற்றிய அச்சம் அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று உயரதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தவிருக்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10:30 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

ஒமைக்ரான்
ஒமைக்ரான்

இன்றைய கூட்டத்தில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படும். இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச்செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர்திகாரிகள், மருத்துவர்கள் குழு ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS