Published:Updated:

Tamil News Today: டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு வேளாண் பட்ஜெட் அர்ப்பணிப்பு!’ - அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம்

14-08-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

14 Aug 2021 10 AM

சட்டசபையில் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று வேளாண்துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்துவருகிறார். `மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு தமிழகத்தின் வேளாண் பட்ஜெட்டை சமர்ப்பிப்பதாக’ அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021

மேலும், ``பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகப்பதற்காக 36 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளும், ஒரு லட்சம் மரக்கன்றுகளும் முழு மானியத்தில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அண்ணா பண்ணை மேம்பாட்டு திட்டம், அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் அண்ணா பன்முக வேளாண் செயல் விளக்க விதைப்பண்ணையாக மேம்படுத்தப்படும்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் பழங்குடியினர் விவசாயிகள் உற்பத்தி செய்யும் சிறுதானியங்களுக்கென பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும்.

வேளாண் தோட்டக்கலை பயிர்களில் பாரம்பர்ய நவீன வேளாண் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு விளக்கும் வகையில் செயல் விளக்கத்திடல்கள் அமைக்கப்படும்” என்றார்.

வேளாண் பட்ஜெட் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் கீழே உள்ள லிங்க்கில் தெரிந்துகொள்ளலாம்!

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021: Live Updates: ``நம்மாழ்வார் மையம், தமிழ்வழியில் வேளாண் படிப்பு!"
14 Aug 2021 7 AM

இன்று தாக்கல் ஆகிறது வேளாண் பட்ஜெட்!

தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசின் முதலாவது பட்ஜெட்டை நேற்று சட்டசபையில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தமிழக சட்டசபை வரலாற்றில் முதன்முறையாக காகிதமில்லா பட்ஜெட்டாக அது தாக்கல் செய்யப்பட்டது.

`தேர்தல் அறிக்கை டு பட்ஜெட்’ -  பொது, வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ள திட்டங்கள் என்னென்ன?

இந்தநிலையில், இந்த அரசின் முதலாவது சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் விவசாயத்துக்குத் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சட்டசபையில் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று வேளாண்துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். பொது பட்ஜெட்டைப்போலவே வேளாண்மைத்துறை பட்ஜெட்டிலும் பல முக்கியத் தகவல்கள், அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு