Published:Updated:

Tamil News Today: திருவள்ளுவர் தினம்... ``நான் கன்னியாகுமரியில் எடுத்த காணொலியைப் பகிர்கிறேன்!” - மோடி ட்வீட்

பிரதமர் மோடி
Live Update
பிரதமர் மோடி

15-01-2022 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

Yesterday at 9 AM

திருவள்ளுவர் தினம் - காணொலியைப் பகிர்ந்த மோடி!

திருவள்ளுவர் தினமான இன்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், ``திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை & அறிவுசார் ஆழத்துக்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியைப் பகிர்கிறேன்” எனப் பதிவிட்டு அந்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

Yesterday at 8 AM

தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு!

புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை மதுரையில் தொடங்கியது. மாடுபிடி வீரர்களின் உறுதிமொழியோடு, கொரோனா பரிசோதனைகள் செய்து தேர்வுசெய்யப்பட்ட வீரர்கள் களத்தில் இருக்கிறார்கள். முதலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இன்றைய பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 700 மாடுகளும், 300 மாடுபிடி வீரர்களும் களத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு சுற்றிலும் பங்கேற்கும் வீரர்களுக்கு வெவ்வேறு நிறத்தில் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS