Published:Updated:

Tamil News Today: லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு; தங்கமணி வீட்டில் கணக்கில் வராத ரூ.2.16 கோடி பறிமுதல்!

தங்கமணி
Live Update
தங்கமணி

15-12-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

15 Dec 2021 6 PM

லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு; தங்கமணி வீட்டில் ரூ.2.16 கோடி பறிமுதல்!

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்தினார்கள். அதில், தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களிலிருந்து கணக்கில் வராத 2.16 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட 2.37 கோடி ரூபாயில், 2.16 கோடி கணக்கில் காட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தங்கமணி
தங்கமணி

மேலும், சோதனையில் 1.13 கிலோ தங்கம், 40 கிலோ வெள்ளி மற்றும் முக்கிய ஆவணங்கள், செல்போன்கள், வங்கி பாதுகாப்பு பெட்டக சாவிகள் மற்றும் கணினி ஹார்டு டிஸ்குகள் கைப்பற்றப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருக்கிறது.

15 Dec 2021 12 PM

ஹெலிகாப்டர் விபத்து: கேப்டன் வருண் சிங் காலமானார்!

Tamil News Today: லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு; தங்கமணி வீட்டில் கணக்கில் வராத ரூ.2.16 கோடி பறிமுதல்!

நீலகிரி மாவட்டம், குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில், அதில் பயணித்த 14 பேரில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி உள்ளிட்ட 13 பேர் விபத்து நடந்த அதே தினத்தில் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் மட்டும், கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். கூடுதல் சிகிச்சைக்காக அவர் பெங்களூருக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில் வருண் சிங் சிகிச்சை பலனின்றி காலமானார் என விமானப்படை அறிவித்திருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
15 Dec 2021 11 AM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 69 இடங்களில் ரெய்டு

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர்களைக் குறித்துவைத்து ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே, முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர். எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியிருந்தது. இந்த நிலையில் 5-வது அதிமுக முன்னாள் அமைச்சராக தங்கமணி தொடர்புடைய இடங்கள், வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்திவருகின்றனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே தங்கமணி வீட்டிலும் சோதனை நடைபெற்றுவருகிறது.

நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட தங்கமணி தொடர்புடைய 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்திவருகின்றனர். அதிகபட்சமாக சென்னையில் மட்டும் தங்கமணி தொடர்புடைய 14 இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது. சென்னை மட்டுமின்றி வேலூர், சேலம், கரூர், நாமக்கல், திருப்பூர், கோவையிலும் சோதனை நடைபெற்றுவருகிறது. தங்கமணி தொடர்பாக கர்நாடகாவில் ஒரு இடத்திலும், ஆந்திராவில் இரண்டு இடங்களிலும் சோதனை நடைபெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர்கள் சிலரின் வீட்டிலும் சோதனை நடைபெற்றுவருகிறது. இதற்கிடையே தங்கமணிமீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தங்கமணியின் மகன் தரணிதரன், மனைவி சாந்தி மீது நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது, கிரிப்டோ கரன்சியில் தங்கமணி பெருமளவில் முதலீடு செய்திருக்கிறார் எனவும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் தெரிவித்துள்ளனர்.

15 Dec 2021 11 AM

விபத்து... ராமதாஸ் வேதனை!

விழுப்புரத்தில் நேற்று நடைபெற்ற பா.ம.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பொன்னங்குப்பத்தைச் சேர்ந்த பாமக-வினர் சிலர் மீண்டும் ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது, கார் மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஆட்டோ ஓட்டுநர் உட்பட பாமக-வினர் 11பேர் காயமடைந்துள்ளனர். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர்களை மயிலம் பாமக எம்.எல்.ஏ சிவகுமார், விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி ஆகியோர் தனித்தனியே சென்று நலம் விசாரித்துள்ளனர்.

விபத்து
விபத்து

"தைலாபுரம் தோட்டம் வந்த பின்னர் கிடைத்த இந்தச் செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது" என அறிக்கை விடுத்திருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.