Published:Updated:

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு! - லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி

16-09-2021 | இன்றைய முக்கிய நிகழ்விகளின் தொகுப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

16 Sep 2021 8 AM

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு!

அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக சோதனை நடத்திவருகிறது.

முன்னாள் அமைச்சர் வீரமணி
முன்னாள் அமைச்சர் வீரமணி

அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த புகாரில் சென்னை, வேலூர், ஜோலார்பேட்டை உட்பட வீரமணிக்குப் பணப் பரிவர்த்தனை இருக்கும் இடங்களில் சோதனை நடத்தப்பட்டுவருகிறது. சென்னையில் நான்கு இடங்களில் சோதனை நடைபெற்றுவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Veeramani FIR
Veeramani FIR

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, முன்னாள் அமைச்சர்கள், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த வரிசையில் மூன்றாவதாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு நடைபெற்றுவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு