Published:Updated:

Tamil News Today: `4 ஆண்டுகளாக மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்துள்ளேன்!’ - சசிகலா பேட்டி

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர்!
Live Update
ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர்!

16-10-2021 | இன்றைய முக்கிய நிகவுகளின் தொகுப்பு..!

16 Oct 2021 12 PM

`4 ஆண்டுகளாக மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்துள்ளேன்!’ - சசிகலா

சசிகலா, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, ``4 ஆண்டுகளாக மனதில் இருந்த பாரத்தினை அம்மா நினைவிடத்தில் இறக்கி வைத்திவிட்டேன். அம்மாவும், தலைவரும் நிச்சயம் அதிமுகவையும் அதன் தொண்டர்களையும் காப்பாற்றுவார்கள்” என்றார்,.

16 Oct 2021 11 AM

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர்!

சசிகலா, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அதிமுக கொடி கட்டிய காரிலேயே சசிகலா மெரினா சென்றார். ஜெயலலிதா நினைவிடத்தின் முன் கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார். நீண்ட நேரம் இரு கைகளை கூப்பி நின்றவர், மலர் தூவி மரியாதை செய்தார். அதிமுக வின் பொன்விழா நாளை தொடங்க உள்ள நிலையில் சசிகலாவின் இந்த மூவ் அதிக கவனம் ஈர்த்திருக்கிறது!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
16 Oct 2021 11 AM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விடுதலையானார் சுதாகரன்!

சுதாகரன்
சுதாகரன்

சொத்துக் குவிப்பு வழக்கில் 2017, பிப்ரவரி 14-ம் தேதி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்றனர். நான்காண்டுகள் கடந்த பின்னர் அபராதத் தொகையைக் கட்டியதால் சசிகலாவும் இளவரசியும் இந்த ஆண்டு தொடக்கத்தில் விடுதலையாகிவிட்டனர். அபராதத் தொகை கட்டாததால், சுதாகரன் கூடுதலாக ஓராண்டு சிறைவாசம் அனுபவிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது அந்தக் காலமும் முடிவடையவே, இன்று சுதாகரன் விடுதலையானார். சசிகலாவின் மூத்த சகோதரி வனிதாமணியின் மகன்தான் சுதாகரன்.

16 Oct 2021 11 AM

மலர் அலங்காரத்தில் ஜொலிக்கும் ஜெயலலிதா சமாதி!

16 Oct 2021 10 AM

ஜெயலலிதா நினைவிடம் புறப்பட்டார் சசிகலா

சசிகலா, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு இன்று சென்று, காலை 11 மணிக்கு மரியாதை செலுத்துகிறார். பின்னர் எம்.ஜி.ஆர்., அண்ணா ஆகியோர் சமாதிகளுக்கு சென்று மரியாதை செலுத்த இருக்கிறார். இதற்காக தற்போது அவர் தனது வீட்டில் இருந்து புறப்பட்டிருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வின் தோல்வியை அடுத்து கட்சியை கைப்பற்றும் முயற்சிகளை அடுத்தது செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிறது!

16 Oct 2021 8 AM

சசிகலா: ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று மரியாதை!

எம்.ஜி.ஆர். தொடங்கிய அதிமுக, தனது பொன்விழா ஆண்டில் நாளை (அக்டோபர் 17) காலடி எடுத்து வைக்க உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்த சசிகலா, தேர்தல் முடிவுக்கு பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டார். இந்தநிலையில் சசிகலா, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு இன்று சென்று, காலை 11 மணிக்கு மரியாதை செலுத்துகிறார். பின்னர் எம்.ஜி.ஆர்., அண்ணா ஆகியோர் சமாதிகளுக்கு சென்று மரியாதை செலுத்த இருக்கிறார். தனது அரசியல் சுற்றுப்பயணம் தொடர்பான அறிவிப்பை அப்போது வெளியிடுவாரா என அவரின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்களாம்.

சசிகலா
சசிகலா

அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு தொடக்க நாளான நாளை, சசிகலா, சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்கு சென்று எம்.ஜி.ஆர் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்துகிறார். பின்னர் சென்னை ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்துக்கும் சசிகலா செல்கிறார். சசிகலா தொடர்ந்து அதிமுக கொடி கட்டிய காரில் பயணித்து வருகிறார் என்பதும் குறிப்பிடதக்கது!