Published:Updated:

Tamil News Today: `நவம்பர் 18-ம் தேதி சென்னைக்கு ரெட் அலெர்ட்!' - சென்னை வானிலை ஆய்வு மையம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

16-11-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

16 Nov 2021 4 PM

கன்னியாகுமரி மழை வெள்ள பாதிப்பு: `துண்டிக்கப்பட்ட சாலைகள்... சேதமடைந்த தோவாளை சானல்!'

கன்னியாகுமரியில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை வெள்ளத்தால் திருப்பதிசாரம்-இறச்சகுளம், தோவாளை சானல், தோவாளை-செண்பகராமன் புதூர் சாலை, வெள்ளமடம்-தாழாக்குடி சாலை ஆகியவை பலத்த சேதமடைந்து சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது.

இதில் குறிப்பாக வெள்ளமடம்-தாழாக்குடி சாலையில் குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை உள்ளதால் குழந்தைகளுடன் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர். அரசு அதிகாரிகள் கனமழையால் சேதமடைந்த இந்த சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.


கன்னியாகுமரியில் கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழை வெள்ளத்தால் திருப்பதிசாரம்-இறச்சகுளம், தோவாளை சானல், தோவாளை-செண்பகராமன் புதூர் சாலை, வெள்ளமடம்-தாழாக்குடி சாலை
ஆகியவை பலத்த சேதமடைந்து சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதில் குறிப்பாக வெள்ளமடம்-தாழாக்குடி சாலையில் குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை உள்ளதால் குழந்தைகளுடன் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர். அரசு அதிகாரிகள் கனமழையால் சேதமடைந்த இந்த சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

16 Nov 2021 1 PM

`நவம்பர் 18-ம் தேதி சென்னைக்கு ரெட் அலெர்ட்!' - சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை மிகக் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. நாளை மறுநாள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்படுகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அதேபோல, மத்திய கிழக்கு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். சேலம், கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருச்சி, கடலூர் உட்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்" என்றார்.

16 Nov 2021 10 AM

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரம்:  தமிழக அரசு மேல்முறையீடு

வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. `இந்த தடை உத்தரவின் மூலமாக ஒட்டுமொத்த நிர்வாகமும் பெரும் இன்னல்களை சந்தித்து இருப்பதாக’ தமிழக அரசு தனது மனுவில் தெரிவித்திருக்கிறது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை மீறாமல் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது எனவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டில் தான் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்றும் உள்ஒதுக்கீடு என்பது வன்னியர் சமூகத்து மட்டுமல்ல, ஏழு பிரிவினருக்கானது என தமிழக அரசு தெரிவித்துள்ளது அரசியலமைப்பு சட்டத்தின்படி உள் ஒதுக்கீடு சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக உயர் நீதிமன்ற கிளை வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது

16 Nov 2021 8 AM

ஜெயலலிதா-வின் ஊழல் வழக்கை விசாரித்த அதிகாரி நல்லம நாயுடு காலமானார்!

 நல்லம நாயுடு
நல்லம நாயுடு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா-வின் ஊழல் வழக்கை விசாரித்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி நல்லமநாயுடு வயது மூப்பு காரணமாக காலமானார்.

16 Nov 2021 8 AM

இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா தான்

கோவையில் கடந்த வருடம் ஜூலை மாதம் உயிரிழந்தது, இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா தான் என டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இலங்கை போதைப்பொருள் கடத்தல் தாதா அங்கொட லொக்கா, 2020 ஜூலை 3-ம் தேதி கோவையில் உயிரிழந்தார். அப்போது போலி ஆவணம் மூலம் கோவையில் பிரேத பரிசோதனை செய்து, மதுரையில் உடல் எரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இலங்கை அரசின் உதவியுடன் அங்கொட லொக்காவின் தாயாரின் டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

இலங்கை தாதா அங்கொட லொக்கா
இலங்கை தாதா அங்கொட லொக்கா

அதனை கொண்டு நடத்தப்பட்ட பரிசோதனையில் கோவையில் இறந்தது அங்கொட லொக்கா தான் என தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு கூட அங்கொட லொக்காவின் கூட்டாளி பெங்களூருவில் கைது செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

சிக்கிய அங்கொட லொக்கா கூட்டாளி! - மீண்டும் சூடுபிடிக்கும் இலங்கை நிழல் உலக தாதா வழக்கு
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு