Published:Updated:

Tamil News Today: `அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தைச் சீர்குலைக்க அவதூறு பரப்புகின்றனர்’ - ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் ( நன்றி: பொதிகை )

17-08-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

17 Aug 2021 12 PM

``அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தைச் சீர்குலைக்கச் சிலர் அவதூறு பரப்பிவருகின்றனர்!”

தமிழகத்தில் ஆகம விதிகளின்படி, முறையாகத் தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சிபெற்ற அனைத்துச் சமுதாயத்தையும் சேர்ந்த 58 பேரை, அர்ச்சகர்கள் இரண்டாம் நிலையில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு பணியில் அமர்த்தி கடந்த 14-ம் தேதி ஆணை வழங்கப்பட்டது. இது தொடர்பாக சில விமர்சனங்கள் எழுந்த நிலையில், பட்டாச்சாரியார்கள், அர்ச்சகர்கள் என யாரும் திருக்கோயில்களிலிருந்து வெளியேற்றப்படவில்லை என அமைச்சர் சேகர் பாபு விளக்கமளித்தார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்தநிலையில், சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து விளக்கம் அளிக்கையில், ``அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தை சீர்குலைக்கச் சிலர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிவருகின்றனர். கோயில்களில் ஏற்கெனவே பணியிலுள்ள அர்ச்சகர்கள் நீக்கப்பட்டதாகப் புகார் எழுந்தால் அரசு அதில் உரிய நடவடிக்கை எடுக்கும். ஆனால் தேவையில்லாமல், சமூகநீதியைப் பாழ்படுத்தும் வகையில் விஷம பிரசாரம் செய்யப்பட்டுவருகிறது” என்றார்.

17 Aug 2021 11 AM

`பொது மன்னிப்பு; பணிக்குத் திரும்புங்கள்!’

தாலிபன்கள்
தாலிபன்கள்

ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபன்கள், ஆட்சி அதிகாரத்தை கைபற்றி உள்ளனர். அதன் காரணமாக மக்கள் அச்சத்தால் வீடுகளில் முடங்கிக்கிடப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், ஆப்கானிஸ்தானில் அரசு அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக தலிபன் அமைப்பு அறிவித்திருக்கிறது. அதனால் அரசு ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும் தாலிபன்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

17 Aug 2021 9 AM

இந்தியர்களுடன் புறப்பட்ட விமானம்!

விமானம்
விமானம்
மாதிரிப் படம்

ஆப்கானிஸ்தான் முழுவதும் தற்போது தாலிபன்கள் கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது. இந்தநிலையில் நேற்று காபூல் விமான நிலையம் மூடப்பட்டதோடு, விமான சேவையையும் ரத்து செய்வதாக தாலிபன் அறிவித்தது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தநிலையில் தற்போது 120 இந்தியர்களுடன் இந்திய ராணுவ விமானம் காபூலிலிருந்து புறப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறும் முடிவில் மாற்றமில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.

17 Aug 2021 8 AM

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு!

காஸ் சிலிண்டர்
காஸ் சிலிண்டர்

கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவந்தது. இந்தநிலையில், இன்று வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டிருக்கிறது.

கடந்த மே மாதம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 825 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 877 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் உயர்வதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு