Published:Updated:

Tamil News Today: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்!

18-09-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

18 Sep 2021 4 PM

பஞ்சாப்: அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்!

அமரீந்தர் சிங்
அமரீந்தர் சிங்

பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அந்த மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார் அமரீந்தர் சிங். முன்னதாக சித்து மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டது முதல் இருவருக்கும் மோதல் போக்கு வலுத்துவந்தது. இன்று மாலை சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் அதற்கு முன்னதாகவே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

18 Sep 2021 11 AM

மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வாகிறார் எல்.முருகன்!

எல்.முருகன்
எல்.முருகன்

தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் எல்.முருகன் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்ட மத்திய அமைச்சரவையில் இடம்பிடித்தார். மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்ட நிலையில், தற்போது மத்தியப் பிரதேசத்தில் காலியாக இருக்கும் மாநிலங்களவைப் பதவிக்கான வேட்பாளராக எல்.முருகனை அறிவித்திருக்கிறது பா.ஜ.க தலைமை. வரும் அக்டோபர் மாதம் 4 -ம் தேதி தேர்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

18 Sep 2021 10 AM

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராகப் பதவியேற்றார் ஆர்.என்.ரவி!

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று காலை 10:30 மணிக்கு சென்னையில் பதவியேற்றுக்கொண்டார். ராஜ்பவனில் ஆர்.என்.ரவிக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எம்.பி-க்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முதல்வர் ஸ்டாலின் புத்தகங்கள் கொடுத்து புதிய ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

18 Sep 2021 8 AM

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்கிறார்!

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், சமீபத்தில் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான, ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக நியமித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

ரவி
ரவி

இதைத் தொடர்ந்து தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்கிறார். அவருக்கு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலி்ன், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு