Published:Updated:

Tamil News Today: மேலும் 13 தமிழக மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை! - பதற்றத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள்

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்!
Live Update
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்!

19-12-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

19 Dec 2021 10 PM

விழுப்புரம்: சாலையோர தள்ளுவண்டியில் பட்டினியால் இறந்து கிடந்த சிறுவன்?! - போலீஸ் தீவிர விசாரணை!

கடந்த சில தினங்களுக்கு முன்பு, விழுப்புரம் - சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேல்தெரு என்ற இடத்தில், சாலையோரத்தில் நின்றிருந்த தள்ளுவண்டியில் 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் இறந்து கிடப்பதாக விழுப்புரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதை எடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

இறந்து கிடந்த சிறுவன்!
இறந்து கிடந்த சிறுவன்!

இதுவரையிலும் சிறுவனின் உடலை யாரும் உரிமை கோராத நிலையில், உடற்கூராய்வில் சிறுவன் பட்டினியால் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

19 Dec 2021 4 PM

மேலும் 13 தமிழக மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை! - பதற்றத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள்

ராமேஸ்வரத்திலிருந்து நேற்றிரவு மீன்பிடிக்கச் சென்ற 43 மீனவர்களையும், அவர்களின் 6 விசைப்படகுகளையும் எல்லைத் தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்!
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்!

இந்த நிலையில், சற்றுமுன் மேலும் 13 மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்திருக்கின்றனர். இதனால் இராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டிருக்கிறது.

இதுவரை 8 விசைப்படகுகள், 55 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
19 Dec 2021 12 PM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 42 பேரை விசைப்படகுகளுடன் சிறைபிடித்த இலங்கை கடற்படை!

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை நெடுந்தீவு அருகே வழிமறித்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி வந்ததாகக் கூறி, 42 பேரை கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும், மீனவர்களின் 6 விசைப்படகுகளையும் சிறைப்பிடித்து இலங்கை கடற்படையினர் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

தமிழக மீனவர்கள்
தமிழக மீனவர்கள்
கோப்பு படம்

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அனுமதிசீட்டு பெற்று முறையாக மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். .