Published:Updated:

Tamil News Today: `அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்!’ - அ.தி.மு.க

மதுசூதனன்
மதுசூதனன்

20-07-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

20 Jul 2021 10 AM

`அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்!’

மதுசூதனன்
மதுசூதனன்

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், அவரது உடல்நிலை குறித்து பல்வேறு செய்திகள் பரவின. இந்தநிலையில், அதிமுக-வின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ``கழக அவைத்தலைவர் மதுசூதனன் அவர்களின் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம். தீவிர சிகிச்சை தொடர்வதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

20 Jul 2021 10 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 30,093 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில், மொத்த கொரோனா பாதிப்பு 3,11,74,322 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 374. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,14,482-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 3,03,53,710-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 4,06,130 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 45,254 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 41,18,46,401 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு