Published:Updated:

Tamil News Today: `காந்தி ஜயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2-ம் தேதி கிராமசபைக் கூட்டம் நடத்த அனுமதி!' - தமிழக அரசு

20-09-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

20 Sep 2021 3 PM

அக்டோபர் 2-ம் தேதி கிராமசபைக் கூட்டத்துக்கு அனுமதி! 

கிராமசபை
கிராமசபை
எம். விஜயகுமார்

தமிழகத்தில் வரும் அக்டோபர் 2-ம் தேதி கிராமசபைக் கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து கிராமசபைக் கூட்டத்தை நடத்திக்கொள்ளலாம் என அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. எனினும், `ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் ஒன்பது மாவட்டங்களில் கிராமசபைக் கூட்டம் நடத்த அனுமதி கிடையாது. கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்’ எனவும் உத்தரவில் கூறப்பட்டிருக்கிறது.

20 Sep 2021 12 PM

பஞ்சாப் மாநில முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றார்!

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங்குடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, அமரீந்தர் சிங் முதல்வர் பதவியைக் கடந்த வாரம் ராஜினாமா செய்தார். இந்தநிலையில், பஞ்சாப் மாநில முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி இன்று பதவியேற்றார், அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

20 Sep 2021 12 PM

கொரோனா தடுப்பூசி போட வெற்றிலை, பாக்கு,பழம் வைத்து அழைப்பு!

வெற்றிலை, பாக்கு
வெற்றிலை, பாக்கு

வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு பேரூராட்சியில் தடுப்பூசி போட, பொதுமக்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து அழைத்த பேரூராட்சி செயல் அலுவலர் குகனின் செயல்பாடு பெரும் பாராட்டைப் பெற்றிருக்கிறது.

20 Sep 2021 10 AM

பஞ்சாப் மாநில புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி இன்று பதவியேற்கிறார்!

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங்குடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, அமரீந்தர் சிங் முதல்வர் பதவியைக் கடந்த வாரம் ராஜினாமா செய்தார். இந்தநிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவராக சரண்ஜித் சிங் சன்னி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

சரண்ஜித் சிங் சன்னி
சரண்ஜித் சிங் சன்னி

இதையடுத்து, எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்துடன், சரண்ஜித் சிங், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதைத் தொடர்ந்து இன்று காலை முதலமைச்சராக அவர் பதவியேற்கவிருக்கிறார். ராகுல் காந்தி இந்த நிகழ்வில் கலந்துகொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு