Published:Updated:

Tamil News Today: ``9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு!" - ஆளுநரைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி புகார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி
ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி

20-10-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

20 Oct 2021 12 PM

ஆளுநரைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தின் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திவரும் நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. இந்தச் சந்திப்பு முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ``உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு பின்பற்றவில்லை. அதிமுக வேட்பாளர்களின் வெற்றியை வேண்டுமென்றே தாமதமாக அறிவித்தனர். திமுக வேட்பாளர்களின் வெற்றியை உடனுக்குடன் அறிவித்தனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி
ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி

ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். அடுத்து நடைபெறவிருக்கும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலையும் நியாயமாக நடத்த வேண்டும்” என்றார். மேலும் திருச்செந்தூரில் அமைச்சரின் உதவியாளர் ஒருவர் தலைமைக் காவலரைக் கன்னத்தில் அறைந்த விவகாரம் கண்டனத்துக்குரியது என்றும் குற்றம்சாட்டினார்.

`அமைச்சர் காரையே ஓரமா நிறுத்தணுமா?’; காவலரை அறைந்த  உதவியாளர்! - திருச்செந்தூரில் சர்ச்சை
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு