Published:Updated:

Tamil News Today: கேரளா, கோவை, கொடைக்கானல்... ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்ய கூடுதல் தனிப்படைகள்!

ராஜேந்திர பாலாஜி
Live Update
ராஜேந்திர பாலாஜி

20-12-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

20 Dec 2021 3 PM

`வேதா நிலையம் விவகாரத்தில் மேல்முறையீடு இல்லை!' - தமிழக அரசு விளக்கம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலைய விவகாரத்தில் மேல்முறையீடு செய்யப்போவது இல்லை என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு விளக்கமளித்திருக்கும் தமிழக அரசு, ``வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்ற நீதிமன்ற உத்தரவுகளை ஏற்றுக்கொண்டதால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யப் போவதில்லை" என்று தெரிவித்திருக்கிறது.

20 Dec 2021 3 PM

ராஜேந்திர பாலாஜியைக் கைதுசெய்ய மேலும் 3 தனிப்படைகள் அமைப்பு!

ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 3 கோடி வரை பணம் பெற்றுக்கொண்டு பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு, வழக்கும் பதிவும் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கே.டி.ராஜேந்திர பாலாஜி சார்பில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி அவர்களின் மனுக்களைத் தள்ளுபடி செய்தது.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

இதைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜியைக் கைதுசெய்வது தொடர்பாக போலீஸார் தீவிரம்காட்டினர். ராஜேந்திர பாலாஜி உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுவந்தது. ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜியைக் கைதுசெய்ய தனிப்படை பெங்களூரு சென்றிருக்கிறது.

இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்ய மேலும் கூடுதலாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கேரளா, கோவை, கொடைக்கானல் ஆகிய பகுதிகளுக்கு விரைந்திருக்கும் தனிப்படையினர் அவரைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
20 Dec 2021 2 PM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு..!

இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருக்கும் தமிழக மீனவர்களை விடுதலை செய்யக் கோரி வரும் புதன்கிழமை ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கின்ன்றனர். மேலும் வரும் 31-ம் தேதிக்குள் இலங்கை சிறையிலிருக்கும் மீனவர்கள் விடுதலை செய்யப்படாத பட்சத்தில் புத்தாண்டான ஜனவரி 1-ம் தேதி மாலை 4 மணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்லும் ரயிலை தங்கச்சிமடத்தில் வைத்து மறித்து போராட்டத்தில் ஈடுபடவும் மீனவர்கள் முடிவு செய்திருக்கின்றனர்.

20 Dec 2021 11 AM

மீனவர்களின் கண்டன ஆர்ப்பாட்டம்!

மீனவர்களின் கண்டன ஆர்ப்பாட்டம்
மீனவர்களின் கண்டன ஆர்ப்பாட்டம்
உ. பாண்டி

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீன்பிடி படகுகளையும் 55 மீனவர்களையும் விடுவிக்கக் கோரி இராமேஸ்வரத்தில் மீனவர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

20 Dec 2021 10 AM

ராஜேந்திர பாலாஜியைக் கைதுசெய்ய பெங்களூரு விரைந்த தனிப்படை!

ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 3 கோடி வரை பணம் பெற்றுக்கொண்டு பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு, வழக்கும் பதிவும் செய்யப்பட்டது.

ராஜேந்திர பாலாஜி.
ராஜேந்திர பாலாஜி.

இந்த நிலையில் கே.டி.ராஜேந்திர பாலாஜி சார்பில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி அவர்களின் மனுக்களைத் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜியைக் கைதுசெய்வது தொடர்பாக போலீஸார் தீவிரம்காட்டினர். ராஜேந்திர பாலாஜி உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுவந்தது. ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜியைக் கைதுசெய்ய தனிப்படை பெங்களூரு சென்றிருக்கிறது.

20 Dec 2021 7 AM

மீண்டும் தங்கமணி... மீண்டும் ரெய்டு!

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 69 இடங்களில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையிட்டனர். சென்னை, நாமக்கல், கரூர், சேலம், ஈரோடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில், தற்போது இன்று காலை முதல் மீண்டும் தங்கமணி தொடர்புடைய 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

தங்கமணி
தங்கமணி

ஏற்கெனவே நடத்திய சோதனையில் கிடைத்த தகவலின்படி, இன்று மீண்டும் சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இந்த ரெய்டு, நாமக்கல் மாவட்டத்தில் 10 இடங்களிலும், ஈரோடு நாவட்டத்தில் மூன்று இடங்களிலும், சேலம் மாவட்டத்தில் ஓரிடதிலும் நடைபெற்றுவருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.