Published:Updated:

Tamil News Today: கோ.சண்முகநாதன் மறைவு; இறுதி அஞ்சலியில் கண் கலங்கிய முதல்வர் ஸ்டாலின்!

கண் கலங்கிய முதல்வர் ஸ்டாலின்!
Live Update
கண் கலங்கிய முதல்வர் ஸ்டாலின்!

21-12-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

21 Dec 2021 7 PM

கோ.சண்முகநாதன் மறைவு; இறுதி அஞ்சலியில் கண் கலங்கிய முதல்வர் ஸ்டாலின்!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நேர்முக உதவியாளர் கோ.சண்முகநாதன் இன்று மதியம் காலமானார். அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கோ.சண்முகநாதனின் பூத உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். உடலுக்கு மாலை அணிவித்தபோது, ஸ்டாலின் கண்கலங்கிப் போனார்.

21 Dec 2021 6 PM

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நேர்முக உதவியாளர் கோ.சண்முகநாதன் காலமானார்..!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நேர்முக உதவியாளர் கோ.சண்முகநாதன் சற்றுமுன் காலமானார். சுமார் 50 ஆண்டுகாலம் கருணாநிதியின் நேர்முக உதவியாளராக பணியாற்றியவர். உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உயிரிழந்துவிட்டார். அவரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
21 Dec 2021 8 AM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புதுக்கோட்டை மீனவர்களும் வேலை நிறுத்தம்!

வேலை நிறுத்தம்!
வேலை நிறுத்தம்!
மாதிரிப் படம்

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி, புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதி மீனவர்கள், தற்போது காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். ஏற்கெனவே, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி இரண்டாவது நாளாகத் தங்களின் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்திவரும், நிலையில் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களும் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.