Published:Updated:

Tamil News Today: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு ( ஃபைல் போட்டோ )

22-10-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

22 Oct 2021 9 AM

நெல்லை மாவட்ட பஞ்சாயத்துத் தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் பாதுக்காப்புக்காக குவிக்கப்பட்டுள்ள போலீஸார்!

இடம்: கேடிசி நகர்

வீடியோ: எல்.ராஜேந்திரன்

22 Oct 2021 9 AM

விஜயபாஸ்கர் தொடர்புடைய நான்கு இடங்களில் ரெய்டு!

கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் கடந்த 17-ம் தேதி அன்று வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. விஜயபாஸ்கருக்குச் சொந்தமான, அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்கள் போன்ற இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

இந்த நிலையில் இன்று, விஜயபாஸ்கருடன் தொடர்புடைய உதவியாளர் சரவணன் வீடு, நண்பர் சந்திரசேகரின் ரியல் எஸ்டேட் நிறுவனம், மற்றோர் உதவியாளர் முருகன் வீடு உட்பட நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனை நடத்திவருகின்றனர். கடந்த முறை ரெய்டு நடந்தபோது, இந்த இடங்கள் மூடியிருந்ததால், அதிகாரிகள் சீல் வைத்துவிட்டுச் சென்றனர். இன்று நீதிமன்ற உத்தரவுடன் ரெய்டு நடத்தப்பட்டுவருகிறது.

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவன் தொடர்புடைய இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திவருகிறார்கள்.

22 Oct 2021 8 AM

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரை!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்தியாவில் மெகா கொரோனா தடுப்பூசித் திட்டம், தொடங்கப்பட்ட ஒன்பது மாதங்களில் 100 கோடி டோஸ் என்கிற இமாலய இலக்கை எட்டியுள்ளது. 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த இந்தியாவுக்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன. இந்த நிலையில்தான் பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். நாட்டு மக்களிடம் மோடி உரையாற்றவிருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்றைய உரையில் வேறு ஏதேனும் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு