Published:Updated:

Tamil News Today: ஒரு நாள் முன்னதாகவே முடிக்கப்பட்ட நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்!

நாடாளுமன்றம்
Live Update
நாடாளுமன்றம்

22-12-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

22 Dec 2021 11 AM

ஒரு நாள் முன்னதாக முடிக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடர்!

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் இறுதியில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தொடரில், 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாகவும், லக்கிம்பூர் சம்பவத்தில் மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டுவந்தன. நாளையுடன் கூட்டத்தொடர் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றுடன் கூட்டத்தொடர் நிறைவுபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.

22 Dec 2021 10 AM

தொடரும் மீனவர்களின் போராட்டம்!

மீனவர்கள்
மீனவர்கள்

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 69 மீனவர்களையும்,10 மீன்பிடி விசைப் படகுகளையும் விடுவிக்கக் கோரி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் பெரும் திரளாகத் திரண்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றனர். சோலியாக்குடி, புதுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களும் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.

- உ.பாண்டி

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
22 Dec 2021 10 AM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நடிகர் விஜய்யின் உறவினரும், `மாஸ்டர்’ பட தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ வீட்டில் ரெய்டு!

 சேவியர் பிரிட்டோ
சேவியர் பிரிட்டோ

நடிகர் விஜய்யின் உறவினரும், `மாஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்திவருகிறது. சீன நிறுவனமான ஷாவ்மி செல்போன் நிறுவனத்தை சேவியர் பிரிட்டோவின் நிறுவனம் கையாளுவதால் வருமான வரித்துறை சோதனை நடத்திவருவதாகத் தெரிகிறது.