Published:Updated:

Tamil News Today: `எனக்கு வழித்துணையாக இருப்பவர் துரைமுருகன்!’ - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

துரைமுருகன் - ஸ்டாலின்
துரைமுருகன் - ஸ்டாலின்

23-08-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

23 Aug 2021 11 AM

`எனக்கு வழித்துணையாக இருப்பவர்!’ 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதன்முறையாக நீர்வளத்துறையின் மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெறுகிறது. நீர்வளத்துறை அமைச்சராக துரைமுருகன் இருக்கிறார். துரைமுருகன் மிக நீண்டகாலமாக சட்டசபையில் பணியாற்றிவருகிறார். இந்தநிலையில், இன்று துரைமுருகனை பாராட்டி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

துரைமுருகன், ஸ்டாலின்
துரைமுருகன், ஸ்டாலின்

அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின், `துரைமுருகன் சட்டப்பேரவையின் நூற்றாண்டு நாயகன். நூற்றாண்டு வரலாறுகொண்ட சட்டசபையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்றிருக்கிரார். அவர் எனக்கு வழிகாட்டியாக இருக்கிறார். கலைஞர் கருணாநிதிக்கும் எனக்கும் வழித்துணையாக இருந்தவர். எந்தத்துறையைக் கொடுத்தாலும் அதில் முத்திரை பதிப்பார். கட்சிக்கும் ஆட்சிக்கும் உறுதுணையாக இருப்பவர் துரைமுருகன். கலைஞர், பேராசிரியர் அன்பழகன் இடத்தில் துரைமுருகனை வைத்துப் பார்க்கிறேன்” என்றார்.

23 Aug 2021 9 AM

இன்று முதல் திரையரங்குகள் இயங்கும்..!

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அதை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து, அதாவது செப்டம்பர் 6-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி நான்கு மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. 50 சதவிகித பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. நேற்று திரையரங்குகளைத் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.

திரையரங்கு
திரையரங்கு

மேலும் பூங்காக்கள், அங்கன்வாடி மையங்கள், விளையாட்டுப் பயிற்சிக்கு மட்டும் நீச்சல்குளங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் பார்கள் போன்றவையும் இன்று முதல் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு