Published:Updated:

Tamil News Today: தாம்பரம் ரயில்நிலையம் அருகே மாணவி கத்தியால் குத்திக் கொலை!

23-09-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

23 Sep 2021 3 PM

தாம்பரம் ரயில்நிலையம் அருகே மாணவி கத்தியால் குத்திக் கொலை!

கொலை
கொலை

தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியைத் தாக்கிய இளைஞர் தனது கழுத்தை அறுத்து தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாணவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

23 Sep 2021 8 AM

அமெரிக்காவில் பிரதமர் மோடி!

நான்கு நாள் பயணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றடைந்தார். விமானத்தில் வாஷிங்டன் சென்றடைந்த அவருக்கு, அமெரிக்கவாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர், இந்திய நேரப்படி அதிகாலை 4 மணியளவில், பிரதமர் மோடி வாஷிங்டன் சென்றடைந்தார்.

அமெரிக்காவில் பிரதமர் மோடி
அமெரிக்காவில் பிரதமர் மோடி

பிரதமர் மோடி, இன்று ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தச் சந்திப்பின்போது முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கவிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களின் சி.இ.ஓ-க்களை சந்தித்துப் பேசுகிறார். தொடர்ந்து அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி.

Tamil News Today: தாம்பரம் ரயில்நிலையம் அருகே மாணவி  கத்தியால் குத்திக் கொலை!

இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு உறவு, ஆப்கன், சீனா விவகாரம், தொழிநுட்பம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. நாளை, அதாவது வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்திக்கும் பிரதமர், தொடர்ந்து குவாட் மாநாட்டிலும் பங்கேற்கிறார். நியூயார்க்கில் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்திலும் உரையாற்றவிருக்கிறார் பிரதமர் மோடி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு