Published:Updated:

Tamil News Today: தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 34 -ஆக உயர்வு! - சென்னையில் 26 பேருக்கு பாதிப்பு

ஒமைக்ரான்
Live Update
ஒமைக்ரான் ( pixa bay )

23-12-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

23 Dec 2021 10 AM

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 34-ஆக உயர்வு!

ஒமைக்ரான்
ஒமைக்ரான்

தமிழ்நாட்டில் புதிதாக 33 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். இதில் சென்னையில் 26, மதுரையில் நான்கு பேருக்கு பாதிப்பு இருக்கிறது. பாதிக்கப்பட்ட அனைவரின் உடல்நலமும் சீராக இப்பதாகவும், மேலும் 24 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்திய அளவில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் 3-வது இடத்தில் இருக்கிறது தமிழகம்.

23 Dec 2021 8 AM

`மீண்டும் மஞ்சப்பை' இயக்கம்!

ஸ்டாலின்
ஸ்டாலின்

தமிழ்நாட்டில் நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாக மஞ்சள்பை இயக்கத்தை சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார். இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், 'மீண்டும் மஞ்சப்பை' என்ற விழிப்புணர்வு இயக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், தடை விதிக்கப்பட்ட நெகிழிப் பொருள்களுக்கு மாற்றுப் பொருள்களின் கண்காட்சியும் இடம்பெறவிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS