Published:Updated:

Tamil News Today: வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம்... சென்னையில் நில அதிர்வு!

மெரினா
மெரினா

24-08-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

24 Aug 2021 1 PM

சென்னையில் நில அதிர்வு!

மெரினா கடற்கரை
மெரினா கடற்கரை

சென்னையில் இன்று நில அதிர்வு உணரப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தால் சென்னையிலும் அதன் நில அதிர்வு உணரப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம், காக்கிநாடா அருகே கடலில் 10 கி.மீ ஆழத்தில் 5.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சென்னையில் நில அதிர்வு பல இடங்களில் உணரப்பட்டுள்ளது. சென்னை கிழக்கு வங்கக் கடல் பகுதியில் சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.!

24 Aug 2021 10 AM

`மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படும்...’ - ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றுவருகிறது. இன்றைய கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி `சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படும்’ என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து பேசுகையில், ``மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், நுழைவுத்தேர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறார். நின்ற தேர்தலிலெல்லாம் வென்ற தலைவர் கருணாநிதி” என தந்தைக்குப் புகழாரம் சூட்டியிருக்கிறார். மேலும், ``அரை நூற்றாண்டு நிரந்தர தலைப்பு செய்தியாக இருந்தவர் கருணாநிதி” எனவும் தெரிவித்திருக்கிறார்.

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்
சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

முதல்வரின் அறிவிப்பு குறித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், ``மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படுவதை முழுமனதுடன் அதிமுக வரவேற்கிறது. 50 ஆண்டுக்காலம் எம்.எல்.ஏ-வாக இருந்த கருணாநிதி பல சிறப்பு சட்டங்களை தமிழகத்துக்குக் கொண்டுவந்தவர். சினிமாவில் கலைஞரின் வசனம் அனல் பறக்கும். அது சமூகத்தை முன்னேற்ற துணை நின்றிருக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை முதல்வர் வெளியிட்டிருக்கிறார். வரலாற்றில் கலைஞரின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு