Published:Updated:

Tamil News Today: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் ஒமைக்ரான் பரவல் - முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை
Live Update
ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை

24-12-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

24 Dec 2021 1 PM

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்த ராணுவ அதிகாரிகள்!

ஹெலிகாப்டர்
ஹெலிகாப்டர்

கடந்த டிசம்பர் 8 -ம் தேதி ஏற்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக ராணுவம் தரப்பில் ஏர் மார்ஷல் மன்வேந்தரா சிங் தலைமையிலும், காவல்துறை தரப்பில் கூடுதல் எஸ்.பி முத்து மாணிக்கம் தலைமையிலும் கடந்த 15 நாள்களாக விசாரணை நடைபெற்று வருகின்றன. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் உதிரி பாகங்களை சேகரிக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், விபத்து நடந்த பகுதியை ஹெலிகாப்டர் மூலம் ராணுவ அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

24 Dec 2021 1 PM

கடலில் மலர்தூவி அஞ்சலி!

தனுஷ்கோடி
தனுஷ்கோடி

தனுஷ்கோடி நகரம் கடலில் மூழ்கி 57- ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அப்பகுதி மீனவர்கள் ஆழிப்பேரலையில் உயிர் நீத்தவர்களுக்கு கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
24 Dec 2021 7 AM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒமைக்ரான் பரவல் - முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தவிருக்கிறார். இதில் தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட முக்கிய அதிகரிகள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தடுப்பூசிப் பணிகளை தீவிரப்படுத்துவது, கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கவிருப்பதாகத் தெரிகிறது. பண்டிகைக் காலம் வருகிறது என்பதால், அதில் பின்பற்றப்படவேண்டிய நெறிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

இதற்கிடையே, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேற்று பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது, ஒமைக்ரான் காரணமாக கொரோனா பரவலின் வேகம் அதிகரித்தால், அதை எதிர்கொள்ள நாடு முழுக்கவும் அதற்கேற்ப சுகாதாரக் கட்டமைப்புகளைத் தயார்ப்படுத்துவது, மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஒருங்கிணைந்து பணியாற்றுவது ஆகியவை குறித்து அதிகாரிகளுக்கு பிரதமரின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு, மாநிலங்களுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில், பண்டிகைக் காலம் வருவதையொட்டி, மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த உள்ளூர் அளவில் ஊரடங்கு, கட்டுப்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுப்பதை பரிசீலிக்க வலியுறுத்தியிருக்கிறது. மேலும், சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்துமாறும் கேட்டுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.