Published:Updated:

Tamil News Today: தமிழ்நாட்டில் நாளை மூன்றாவது தடுப்பூசி முகாம்! - 15 லட்சம் டோஸ் செலுத்த இலக்கு

25-09-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

25 Sep 2021 11 AM

நாளை மூன்றாவது தடுப்பூசி முகாம்!

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி, கடந்த செப்.12 -ம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் 20 லட்சம் தடுப்பூசிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவது கொரோனா தடுப்பூசி முகாம் செப்.19-ம் தேதி 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. மூன்றாவது தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை, அதாவது நாளை 20 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் மூலம் 15 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 Sep 2021 11 AM

தமிழகத்தில் 2,512 ரெளடிகள் கைது!

சைலேந்திர பாபு
சைலேந்திர பாபு

தமிழ்நாட்டில் கடந்த 36 மணிநேரத்தில் மொத்தம் 2,512 ரெளடிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்திருக்கிறார்.

இதில் 733 ரெளடிகள் நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்பட்டதாகவும், நன்னடத்தைக்காக ஜாமீன் பெறப்பட்டு 1,927 ரவுடிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்திருக்கிறார். சிறைக்கு அனுப்பப்பட்டவர்களிடம் இருந்து 5 துப்பாக்கிகள், 934 கத்தி, அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு