Published:Updated:

Tamil News Today: மூன்று மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!

25-11-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

25 Nov 2021 6 PM

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்! - வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் புதிதாக உருவாகியிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஏற்கெனவே, தூத்துக்குடி மாவட்டத்துக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.

ரெட் அலர்ட்
ரெட் அலர்ட்

இந்த நிலையில், தற்போது நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கும் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருக்கிறது. இந்த மூன்று மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் துரிதமாக மேற்கொண்டுவருகின்றனர்.

25 Nov 2021 8 AM

தமிழகத்துக்கு ஐந்து நாள்களுக்கு `ஆரஞ்ச் அலர்ட்!’

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இன்று தொடங்கி, அடுத்த சில நாள்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை வரை இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்துவருகிறது. புதுச்சேரியில் விடிய விடிய மழை பெய்துவருகிறது.

சென்னையில் மழை
சென்னையில் மழை
வி.ஸ்ரீனிவாசலு

புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உட்பட 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இதற்கிடையே, கனமழை காரணமாக புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை
மழை

இதற்கிடையே இந்திய வானிலை ஆய்வு மையம், 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும், தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாள்களுக்கு கனமழைக்கான `ஆரஞ்ச் அலர்ட்’ விடுக்கப்பட்டிருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு