Published:Updated:

Tamil News Today: ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை... வெளிநாட்டிலிருந்து வரும் அனைவருக்கும் 7 நாள்கள் தனிமை கட்டாயம்!

ஒமைக்ரான்
Live Update
ஒமைக்ரான் ( pixa bay )

25-12-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

25 Dec 2021 1 PM

ஒமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கை... வெளிநாட்டிலிருந்து வரும் அனைவருக்கும் ஏழு நாள்கள் தனிமை!

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்துச் சொல்வதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், `ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 34 பேரில் 12 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவருக்கும் நாளை முதல் ஏழு நாள்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான்
ஒமைக்ரான்
pixa bay

அபாய நாடுகள் மட்டுமின்றி, அபாயம் இல்லாத நாடுகளிலிருந்து வருவோருக்கும் இந்த ஏழு நாள் தனிமை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வந்த 39 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருக்கிறது. அவர்களுக்கான முடிவு இன்னும் ஐந்து நாள்களில் வரும்” என்றார். மேலும், `நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தைக் கூட்டமாகக் கொண்டாட வேண்டாம். அதிகம் பேர் கூடும் ஆடல், பாடல் போன்ற நிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும். புத்தாண்டு கொண்டாடும் மக்கள் பிற மாநிலங்களுக்குச் செல்வதையும் தவிர்க்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

25 Dec 2021 12 PM

ஒமைக்ரான்: தமிழகம் வருகிறது மத்தியக் குழு!

ஒமைக்ரான்
ஒமைக்ரான்

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில் ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்தியக் குழு விரைகிறது. தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க மத்திய சுகாதாரத்துறையின் உயர்மட்டக்குழு 10 மாநிலங்களுக்குச் செல்கிறது எனக் கூறப்பட்டுள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
25 Dec 2021 10 AM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`தேமுதிக-வில் செயல் தலைவர் பதவி?!' - பிரேமலதா விஜயகாந்த் பதில்

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

சென்னையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்தே போட்டியிடும்” என தெரிவித்தார். தொடர்ந்து கட்சியில் செயல் தலைவர் பதவி குறித்துப் பேசிய அவர், ``தேமுதிக-வில் செயல் தலைவர் பதவியை ஏற்படுத்துவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை விஜயகாந்த் பொதுக்குழுவில் வெளியிடுவார்” என்றார். கடந்த சில நாள்களாக பிரேமலதா விஜயகாந்த் செயல்தலைவர் ஆக்கப்படுவார் என்ற கருத்துகள் வெளியான நிலையில் அவர் இதைத் தெரிவித்திருக்கிறார்.

25 Dec 2021 9 AM

வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை செய்யும் தலைவர்கள்!

முன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ்பாயின் 97-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியிலுள்ள நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், வாஜ்பாய் நினைவிடத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஓம் பிர்லா உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

25 Dec 2021 9 AM

இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு!

கோயில்
கோயில்

வரும் ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் அறநிலையத்துறை கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாரங்களில் ஆவின் நெய், வெண்ணெய் பயன்படுத்த இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. பக்தர்கள் நெய்விளக்கு ஏற்ற விற்கப்படும் நெய்க்கும் ஆவினிலிருந்து கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.