Published:Updated:

Tamil News Today: `சசிகலா குறித்த கேள்விக்கு... `நன்றி’ ; பிரதமரிடம் பேசியது என்ன?! - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

மோடியுடன் எடப்பாடி, பன்னீர்
Live Update
மோடியுடன் எடப்பாடி, பன்னீர்

26-07-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

26 Jul 2021 8 PM

அஸ்ஸாம் - மிசோரம் எல்லையில் மோதல்; 6 காவலர்கள் பலி!

அஸ்ஸாம் - மிசோரம் எல்லைப்பகுதியில் ஏற்பட்டுவந்த அசாதாரண சூழல் குறித்து இரு மாநில் முதல்வர்களும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் தற்போது அஸ்ஸாம் - மிசோரம் எல்லைப்பகுதியில் நடைபெற்ற வன்முறையில் 6 காவலர்கள் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இருமாநில முதல்வர்களும் டிவிட்டரில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி உ்ள்ளது.

26 Jul 2021 1 PM
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`பிரதமரிடம் பேசியது என்ன?’ - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று திடீரென தனித்தனியாக டெல்லி பயணம் மேற்கொண்டனர். இருவரும் இன்று காலையில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினர். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. இந்தச் சந்திப்பில் ஓ.பன்னீர் செல்வமும் கலந்துகொண்டார்.

எடப்பாடி - பன்னீர்
எடப்பாடி - பன்னீர்

செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ``சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டதற்கு பிரதமரிடம் நன்றி தெரிவித்தோம். மேக்கேதாட்டு விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கு அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது எனப் பிரதமரிடம் விலியுறுத்தினோம். மேலும், தமிழகத்துக்குக் கூடுதலாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என அதிமுக சார்பில் தெரிவித்தோம். அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரே கருத்துடன் இணைந்திருக்கிறார்கள்” என்றார்.

செய்தியாளர்கள் சசிகலா செயல்பாடு குறித்துக் கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதிலளிக்க மறுத்த எடப்பாடி பழனிசாமி, `நன்றி’ எனத் தெரிவித்துவிட்டுச் சென்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
26 Jul 2021 12 PM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா!

எடியூரப்பா -  மோடி
எடியூரப்பா - மோடி

கர்நாடகா அரசியலில் கடந்த சில நாள்களாக நடைபெற்றுவந்த குழப்பத்துக்கு மத்தியில், எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். தொடர்ந்து எடியூரப்பாவுக்கு எதிராக பா.ஜ.க உறுப்பினர்கள் சிலர் குற்றம்சாட்டிவந்த நிலையில், டெல்லியில் எடியூரப்பா, பிரதமர் மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். இந்தநிலையில், இன்று எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இன்று மாலை ஆளுநரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிக்கவிருக்கிறார்,

26 Jul 2021 11 AM

பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று திடீரென தனித்தனியாக டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டனர். இருவரும் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்துவருகின்றனர். சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பின்னர், சசிகலாவின் அரசியல் நகர்வுகள் அ.தி.மு.க-வுக்குள் புயலைக் கிளப்பிவரும் நிலையில், இந்தச் சந்திப்பு முத்தியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

26 Jul 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 39,361 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 416. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,20,967-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா
கொரோனா
Anupam Nath

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 3,05,79,106 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 4,11,189 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 35,968 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 43,51,96,001 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

26 Jul 2021 8 AM

டெல்லியில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி!

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று திடீரென தனித்தனியாக டெல்லி பயணம் மேற்கொண்டனர். இருவரும் இன்று காலையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பின்னர், சசிகலாவின் அரசியல் நகர்வுகள் அ.தி.மு.க-வுக்குள் புயலைக் கிளப்பிவரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக டெல்லி புறப்பட்டுச் சென்றது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது.

எடப்பாடி - பன்னீர்
எடப்பாடி - பன்னீர்

இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை நாடாளுமன்றக் கட்டடத்திலுள்ள அவரது அறையில் இருவரும் கூட்டாகச் சந்தித்துப் பேசுகிறார்கள். இந்தச் சந்திப்பு தொடர்பாக அதிமுக வட்டாரத்தில் விசாரித்தால், `தேர்தலுக்குப் பிந்தைய வழக்கமான சந்திப்புதான். இதில் அரசியல் இல்லை’ என்கிறார்கள். மேலும் மேக்கேதாட்டு விவகாரம் தொடர்பாகவும், தமிழகத்துக்குக் கூடுதல் தடுப்பூசிகள் வழங்குவது தொடர்பாகவும் பிரதமரிடம் கோரிக்கை வைக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism