Published:Updated:

Tamil News Today: `இந்தியாவில் ஒரே நாளில் 46,164 பேருக்கு பாதிப்பு; கேரளாவில் மட்டும் 31,455!’ - கொரோனா நிலவரம்

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

26-05-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

26 Aug 2021 9 AM

இந்தியாவில் மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில், கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு குறைவதும் அதிகரிப்பதுமாக மாறி மாறி இருக்கிறது. கடந்த சில நாள்களாக பாதிப்பு குறைந்துவந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில், புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 46,164-ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 3,25,58,53-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நேற்று பதிவான 46,164 என்னும் பாதிப்பு எண்ணிக்கையில் கேரளாவில் மட்டும் 31,455 பாதிப்புகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா
கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 607 பேர் கொரோனா காரணமாக பலியாகியுள்ளனர். இந்தியாவில் மொத்த பலி எண்ணிக்கை 4,36,365-ஆக உயர்ந்திருக்கிறது. நேற்று ஒரே நாளில் 34,159 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவிலிருந்து இதுவரை 3,17,88,440 பேர் பாதிப்பிலிருந்து மீண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 80,40,407 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இதுவரை 60,38,46,475 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு