Published:Updated:

Tamil News Today: ராஜேந்திர பாலாஜி மீது மேலும் 3 மோசடி புகார்கள்; இறுகும் பிடி!

 ராஜேந்திர பாலாஜி
Live Update
ராஜேந்திர பாலாஜி

26-12-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

26 Dec 2021 7 PM

ராஜேந்திர பாலாஜி மீது மேலும் 3 மோசடி புகார்கள்; இறுகும் பிடி!

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரில், ராஜேந்திர பாலாஜியை தனிப்படையினர் தேடி வருகின்றனர். அவர் விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க `லுக் - அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் பெயரில் உள்ள 6 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டிருக்கின்றன.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு மேலும் 3 மோசடி புகார்கள் வந்திருக்கின்றன. மதுரையைச் சேர்ந்த நபருக்கு மாநகராட்சி அலுவலக உதவியாளர் பணி வாங்கித் தருவதாகவும், கடலூரைச் சேர்ந்த நபருக்கு இந்து அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர் பணியும் வாங்கி தருவதாகவும், சிவகாசியைச் சேர்ந்த நபருக்கு உதவி மக்கள் தொடர்பாளர் பணி வாங்கித் தருவதாகவும் கூறி மூவரிடமும் ராஜேந்திர பாலாஜி தலா 7 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார்கள் வந்திருக்கின்றன. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் தெரிவித்திருக்கிறார்.

26 Dec 2021 1 PM

ஒமைக்ரான்; அஸ்ஸாமைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் இரவு நேர ஊரடங்கு!

இந்தியாவில் ஒமைக்ரான் நோய்த்தொற்று பரவல் அதிகமாக இருக்கும் மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று. நோய்த்தொற்று பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாநிலங்களில், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்திலும் வரும் 28-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரும் என அந்த மாநில முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

பசவராஜ் பொம்மை
பசவராஜ் பொம்மை

இன்று காலை ஒமைக்ரான் பரவல் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் பசவராஜ் பொம்மை, டிசம்பர் 28-ம் தேதி முதல் அடுத்த 10 நாள்களுக்கு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைக்கப்படும் என்றார். அதேபோல, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் கர்நாடகாவில் கடும் கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்திருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
26 Dec 2021 8 AM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒமைக்ரான் பரவல்; அஸ்ஸாமில் இரவு நேர ஊரடங்கு அமல்!

இந்தியாவில் கொரோனா வைரஸின் புதிய வகை திரிபான ஒமைக்ரான் நோய்த்தொற்றின் பரவல் கடந்த சில தினங்களாக அதிகரித்து காணப்படுகிறது. நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் அந்தந்த மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மாநில அரசுகள் ஒமைக்ரான் பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியிருக்கின்றன. அந்த வகையில், அஸ்ஸாம் மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கினை அந்த மாநில அரசு இன்று முதல் அமல்படுத்தவிருக்கிறது.

ஒமைக்ரான்
ஒமைக்ரான்

அஸ்ஸாமில் இன்று முதல் இரவு 11.30 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலுக்கு வருகிறது. வரும் 31-ம் தேதி மட்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் காரணமாக இரவு நேர ஊரடங்கு ஒரு நாள் ரத்தாகிறது. மேலும், திரையரங்குகளில் 50 சதவிகித பார்வையளார்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மக்கள் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும், அஸ்ஸாம் அரசு அறிவுறுத்தியிருக்கிறது.