Published:Updated:

Tamil News Today: புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமியின் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது!

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

News Update 27-06-2021

27 Jun 2021 3 PM

புதுச்சேரி அமைச்சரவை பதவியேற்றது!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக 50 நாட்கள் முடிவடைந்த நிலையில் இன்று புதிய அமைச்சரவை பதவியேற்றது. முன்னதாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி மட்டும் முதலமைச்சராக பதவியேற்றிருந்தார். இன்று 5 அமைச்சர்களுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். என்.ஆர்.காங்கிரஸ் சார்பாக 3 பேரும், கூட்டணிக் கட்சியான பா.ஜ.க சார்பில் 2 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள்:

1. தேனி ஜெயக்குமார்

2. லட்சுமி நாராயணன்

3. சந்திரா ப்ரியங்கா (40 ஆண்டுகளில் முதல் பெண் அமைச்சர்)

பா.ஜ.க அமைச்சர்கள்:

1. நமச்சிவாயம்

2. சாய் சரவணக்குமார்.

27 Jun 2021 10 AM

இந்திய கொரோனா நிலவரம்

இந்திய அளவில் கொரோனாவின் பாதிப்பு மீண்டும் 50 ஆயிரத்தைக் கடந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் 50,040 பேருக்கு கொரோனா உறுதியாகியிருக்கிறது. 57,994 பேர் கொரோனா நோயில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தம் 2.92 கோடி பேர் குணமடைந்துள்ளனர். ஒரே நாளில் 1258 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 3.95 லட்சம் மக்கள் கொரோனாவுக்கு இந்தியாவில் உயிரிழந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு