Published:Updated:

Tamil News Today: பிரதமர் மோடியைத் தொடர்ந்து அமித் ஷாவைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி - 
அமித் ஷா - ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா - ஓ.பன்னீர்செல்வம்

27-07-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

27 Jul 2021 11 AM

அமித்ச் ஷாவை சந்தித்த ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்!

Tamil News Today: பிரதமர் மோடியைத் தொடர்ந்து அமித் ஷாவைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி!

நேற்று முன்தினம், டெல்லி சென்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினர். இந்தநிலையில், இன்று பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து ஆலோசனை நடத்திவருகின்றனர்.

27 Jul 2021 10 AM

அதிரடிகாட்டும் கோவை காவல்துறை!

கோவை மாவட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிது. மாநகரின் முக்கியப் பகுதிகளில் மேம்பாலங்கள் அமைப்பது போன்ற பணிகளால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துவருகிறது. இதையடுத்து, விபத்துகளைக் குறைப்பதற்காக, கோவை மாநகர எல்லைக்குள் வேகக் கட்டுப்பாட்டு நடைமுறைகளை அமல்படுத்தியது காவல்துறை. இது குறித்து, கோவை மாநகர காவல்துறை பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், ‘கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி, கோவை மாநகர எல்லைக்குள் வேகக் கட்டுப்பாடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காந்திபுரம் முதல் கணபதி வரை, 100 அடி ரோடு, கிராஸ்கட் ரோடு, பாரதியார் ரோடு, சுக்கிரவார்பேட்டை முதல் மேம்பாலம் வரை, வைசியாள் வீதி முதல் செல்வபுரம் வரை ஆகிய போக்குவரத்து நெருக்கடி நிறைந்த முக்கியப் பகுதிகளில் 30 கி.மீ வேகத்தில்தான் வாகனங்களை இயக்க வேண்டும்.

கோவை காவல்துறை அறிவிப்பு
கோவை காவல்துறை அறிவிப்பு

கோவை மாநகரின் மற்ற பகுதிகளில் 40 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்கள் இயக்க வேண்டும். கோவை மாநகர காவல்துறையால் விதிக்கப்பட்ட இந்த வேகக் கட்டுப்பாட்டை மீறினால் மோட்டார் வாகனச் சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பொதுமக்கள் இந்த வேகக் கட்டுப்பாட்டைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்” என்று காவல்துறை கூறியுள்ளது.

- குருபிரசாத்

27 Jul 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 29,689 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 415. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,21,382-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா
கொரோனா

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 3,06,21,469 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 3,98,100 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 42,363 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 44,19,12,395 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

27 Jul 2021 9 AM

உள்ளாட்சித் தேர்தல் - ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பால். ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்தநிலையில், இந்த மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வரும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதிக்குள் இந்த ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாகவும், வரும் டிசம்பர் மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படவிருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு