Published:Updated:

Tamil News Today: சென்னை திருவொற்றியூரில் தரைமட்டமான குடிசை மாற்று வாரிய கட்டடம்! - மீட்புப்பணிகள் தீவிரம்

தரைமட்டமான குடிசை மாற்று வாரிய கட்டடம்
Live Update
தரைமட்டமான குடிசை மாற்று வாரிய கட்டடம்

27-12-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

27 Dec 2021 11 AM

தரைமட்டமான குடிசை மாற்று வாரிய கட்டடம்!

சென்னை திருவொற்றியூரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் இன்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு விரிசல் ஏற்பட்டிருந்த குடியிருப்பில் இருந்து மக்கள் அவசர அவசரமாக வெளியேறிய நிலையில் கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகளில் யாரும் சிக்கி உள்ளனரா என தேடி வருகின்றனர்.

முதற்கட்ட தகவலின்படி மக்கள் அவசரமாக வெளியேறியதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. மொத்தம் 24 வீடுகள் இருந்த டி ப்ளாக் தரை மட்டம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. மீட்பு பணிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். !

27 Dec 2021 11 AM

பேருந்து - லாரி மோதல்! - 10 பேர் காயம்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை நோக்கி இன்று காலை அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அந்த பேருந்து, சிறுமுகை அருகே ஆலாங்கொம்பு 3 பிரிவு சந்திப்பு பகுதியில் சென்ற போது எதிரே தென் திருப்பதியில் இருந்து வந்த லாரி ஒன்று மோதியது.

Tamil News Today: சென்னை திருவொற்றியூரில் தரைமட்டமான குடிசை மாற்று வாரிய கட்டடம்! - மீட்புப்பணிகள் தீவிரம்
Premkumar SK

லாரி மோதிய வேகத்தில் பேருந்து, சாலையோரம் இருந்த கடையின் மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இதுகுறித்து சிறுமுகை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
27 Dec 2021 11 AM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பரோலில் வெளியே வந்தார் நளினி!

நளினி
நளினி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினி ஒரு மாத பரோலில், வேலூர் பெண்கள் சிறையிலிருந்து இன்று காலை வெளியே வந்தார்.

27 Dec 2021 7 AM

இன்று வெளியே வருகிறார் நளினி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவர் மனைவி நளினி பெண்கள் சிறையிலும் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்துவருகிறார்கள். இவர்கள் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்யக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன. இந்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் தன்னை அருகிலிருந்து கவனித்துக்கொள்வதற்காகத் தன் மகள் நளினியை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று அவர் தாயார் பத்மா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, நளினிக்கு பரோல் கொடுக்க தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்தது. இதனை தொடர்ந்து அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது

Tamil News Today: சென்னை திருவொற்றியூரில் தரைமட்டமான குடிசை மாற்று வாரிய கட்டடம்! - மீட்புப்பணிகள் தீவிரம்

வேலூர் பெண்கள் சிறையிலிருக்கும் நளினி ஒரு மாத பரோலில் இன்று வெளியே வருகிறார். காட்பாடி பிரம்மபுரம் கெங்கையம்மன் கோயில் தெருவிலிருக்கும் குடும்ப நண்பரின் வீட்டில் அவர் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடைசியாக, 2019-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி ஒரு மாத பரோலில் வெளிவந்திருந்தார் நளினி.

-லோகேஷ்வரன்