Published:Updated:

Tamil News Today: பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் விடுப்பு நீட்டிப்பு! - தமிழ்நாடு அரசு ஆணை

எழுவர் விடுதலை - பேரறிவாளன்
எழுவர் விடுதலை - பேரறிவாளன்

28-06-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

28 Jun 2021 1 PM

`2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தமிழகம் வருகிறது!’

கோவிஷீல்டு தடுப்பூசி
கோவிஷீல்டு தடுப்பூசி

மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்துகள், இன்று மாலை 5.30 மணிக்கு, சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட உள்ளது. தமிழகத்துக்கு இதுவரை 1.44 கோடி தடுப்பூசி வந்துள்ளன. 1.41 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. கையிருப்பில் 2 லட்சம் தடுப்பூசி உள்ளன. அதுவும் இன்னும் சிறிது நேரத்தில் காலியாகிவிடும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்த நிலையில், இன்று மாலை 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தமிழகம் வருகிறது.

28 Jun 2021 1 PM

`தடுப்பூசி ஒதுக்கீட்டை 90% ஆக உயர்த்தி வழங்குக..!’

ஸ்டாலின்
ஸ்டாலின்

அரசு மருத்துவமனைகளுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை 90% ஆக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். `தனியார் மருத்துவமனைகளுக்கு 10% தடுப்பூசி வழங்கினால் போதுமானது. 25% ஒதுக்கீடு என்பது அதிகமானது. தனியார் மருத்துவமனைகளில் 8 லட்சம் தடுப்பூசி இருப்பு உள்ளன’ என முதலமைச்சர் தனது கோரிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

28 Jun 2021 1 PM

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் விடுப்பு நீட்டிப்பு!

பேரறிவாளன்
பேரறிவாளன்

உடல்நிலையை கருத்தில் கொண்டு மருத்துவ சிகிச்சைக்காக பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் விடுப்பு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சிறை விடுப்பு முடிவடைந்த நிலையில் இன்று சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்படவிருந்தார் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில், பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் விடுப்பு அளித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

28 Jun 2021 10 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 46,148 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 3,02,79,331 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 979. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,96,730-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,93,09,607-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 5,72,994 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 58,578 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 32,36,63,297 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

28 Jun 2021 8 AM

அமலுக்கு வந்தது தளர்வுகளுடன் ஊரடங்கு..!

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை உச்சகட்டத்தை அடைந்த நிலையில், கடந்த மே மாதம் 24-ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் தொற்றுப் பரவலின் வேகம் குறையத் தொடங்கியதும், ஒவ்வொரு வாரமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவருகிறது.

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்களும் கொரோனா பாதிப்பின் அடிப்படையில், மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வகை 1-ல் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களும், வகை 2-ல் அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களும், வகை 3-ல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

தேனி ஆட்சித்தலைவர்
தேனி ஆட்சித்தலைவர்

இதில் வகை 3-ல் உள்ள மாவட்டங்களில், வழிபாட்டுத் தலங்கள் திறப்பு, துணிக்கடைகள், நகைக்கடைகள் திறப்பு உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. வகை இரண்டில், கூடுதல் தளர்வுகளுடனும், வகை மூன்று கட்டுப்பாடுகளுடனும் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், மக்கள் கூடுதல் கவனத்துடன் முகக்கவசம் அணிந்து, அவசியத்துக்கு மட்டும் மக்கள் வெளியே வர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

தேனி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு, பயணிகள் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிந்துவருவதை உறுதிப்படுத்த அறிவுறுத்தினார்.
தேனி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு, பயணிகள் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிந்துவருவதை உறுதிப்படுத்த அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு ஊரடங்கு:`ஜூலை-5 வரை நீட்டிப்பு; 3 வகை மாவட்டங்களில் புதிய தளர்வுகள் என்னென்ன?'
அடுத்த கட்டுரைக்கு