Published:Updated:

Tamil News Today: காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேரத் தலைவர் நியமனம்!

28-09-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

28 Sep 2021 11 AM

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேரத் தலைவர் நியமனம்!

காவிரி ஆறு
காவிரி ஆறு

காவிரி மேலாண்மை ஆணைய முழுநேரத் தலைவராக எஸ்.கே.ஹல்தார் நியமிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. எஸ்.கே.ஹல்தார் ஐந்து ஆண்டுகளுக்கு இந்தத் தலைவர் பதவியில் நீடிப்பார் என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

28 Sep 2021 9 AM

201 நாள்களுக்குப் பிறகு 20,000-க்குக் கீழ் குறைந்த தினசரி பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. ஒருபுறம் மெகா தடுப்பூசி திட்டம் வேகமெடுத்திருக்கும் நிலையில், கொரோனா பாதிப்பும் குறைந்துவருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,795 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 20,000 -க்கும் கீழ் சுமார் 201 நாள்களுக்குப் பிறகு பதிவாகியிருக்கிறது. தற்போது இந்தியாவில் 2,92,206 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

இதுவரை இந்தியாவில் 3,36,97,581 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 179 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். இதுவரை இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 4,47,373 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் தற்போது வரை 87,07,08,636 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,02,22,525 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு