Published:Updated:

Tamil News Today: `மேலும் 2 தடுப்பூசிகளுக்கும், மால்னுபிரவிர் என்னும் மாத்திரைகளுக்கும் அனுமதி!’ - மத்திய அரசு

கொரோனா தடுப்பூசி
Live Update
கொரோனா தடுப்பூசி

28-12-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

28 Dec 2021 11 AM

இந்தியாவில் மேலும் 2 தடுப்பூசிகளுக்கு அனுமதி!

உலகம் முழுவதும் ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தி வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்திருக்கிறது. இந்தியாவிலும் முழு வீச்சில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளுடன் கூடுதலாக, கோர்பிவேக்ஸ் , கோவோவேக்ஸ் ஆகிய தடுப்பூசிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

Tamil News Today: `மேலும் 2 தடுப்பூசிகளுக்கும், மால்னுபிரவிர் என்னும் மாத்திரைகளுக்கும் அனுமதி!’ - மத்திய அரசு

மேலும் கொரோனா சிகிச்சைக்கான மால்நுபிரவிர் என்னும் மாத்திரைக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு அவசர தேவைகளின் அடிப்படையில் வழங்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த மாத்திரைகளை 13 நிறுவனங்கள் தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 Dec 2021 10 AM

காங்கிரஸ் நிறுவன தினம்... அறுந்து விழுந்த கொடி!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 137-வது நிறுவன தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அகில இந்திய அளவில் டெல்லியிலும் அனைத்து மாநில, மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் கட்சியின் கொடியை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஏற்ற வந்தார். அப்போது கொடியை ஏற்றும் போது கொடி அறுந்து கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
28 Dec 2021 9 AM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியாவில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பாதிப்பு!

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 653 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 167 பேரும், டெல்லியில் 165 பேருக்கும் பாதிப்பு பதிவாகி இருக்கிறது.

மாநில வாரியாக ஒமைக்ரான் பாதிப்பு
மாநில வாரியாக ஒமைக்ரான் பாதிப்பு

தமிழ்நாட்டில், இதுவரை 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு பதிவாகி இருக்கிறது. இந்திய அளவில் 186 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.