Published:Updated:

Tamil News Today: ``அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க மத்திய அரசு தயார்!’’ - பிரதமர் மோடி பேட்டி

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி
Live Update
நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி

29-11-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

29 Nov 2021 12 PM

திருச்சி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தயாராகும் உணவு!

திருச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கோவா அபிஷேகபுரம் கோட்டம் பகுதியில் உணவு தயாரிக்கும் பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

படங்கள் - தே.தீட்ஷித்

29 Nov 2021 12 PM

மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து... மக்களவையில் நிறைவேற்றம்!

Tamil News Today: ``அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க மத்திய அரசு தயார்!’’ - பிரதமர் மோடி பேட்டி

மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார். எதிர்கட்சிகளின் பலத்த அமளிக்கு இடையே, வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் வைக்கப்பட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
29 Nov 2021 12 PM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்தமானில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறும்! -  வானிலை ஆய்வு மையம்

தெற்கு அந்தமான் அருகே உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

காற்றழுத்த தாழ்வுப்  பகுதி
காற்றழுத்த தாழ்வுப் பகுதி

காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கூறப்படுகிறது. மத்திய கிழக்கு அரபிக்கடலில் வரும் டிசம்பர் 1-ம் தேதி மற்றுமொரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

29 Nov 2021 11 AM

நெல்லை: கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

29 Nov 2021 10 AM

``அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயார்!’’ - பிரதமர் மோடி

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி, அடுத்த மாதம் 23-ம் தேதி நரை நடைபெறவிருக்கிறது. முதல் நாள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்த பிரதமர் மோடி, நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``இது நாடாளுமன்றத்தின் முக்கியமான கூட்டத்தொடர். நாட்டின் குடிமக்கள் ஆக்கபூர்வமான அமர்வை விரும்புகிறார்கள். ஒளிமயமான எதிர்காலத்துக்காக அவர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுகிறார்கள்.

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி
நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க எங்கள் அரசு தயாராக இருக்கிறது. நாம் நாடாளுமன்றத்தில் விவாதித்து, நடவடிக்கைகளின் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டும்” என்றவர், கொரோனா வைரஸின் புதிய வேரின்ட்-ஆன ஒமிக்ரான் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

29 Nov 2021 8 AM

தொடர் மழை... 25 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் தென்காசி, தேனி, திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகை, விருதுநகர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

மழை
மழை
Pixabay

மேலும் சேலம், அரியலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் தருமபுரி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில நாள்கள் மழை தொடரலாம் எனக் கூறப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

29 Nov 2021 7 AM

வேலூர் அருகே லேசான நில அதிர்வு!

வேலூர்
வேலூர்

வேலூர் அருகே இன்று அதிகாலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது எனத் தமிழக பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்திருக்கிறது. அதிகாலை 4:17 மணிக்கு ரிக்டர் அளவில் 3.6 என்ற அளவில் நில அதிர்வு உணரப்பட்டது எனக் கூறப்படுகிறது. இந்த நில அதிர்வால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.