Published:Updated:

Tamil News Today: மதுரை ஆவின் முறைகேட்டில் ராஜேந்திர பாலாஜிக்குத் தொடர்பா?! - லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை

ராஜேந்திர பாலாஜி
Live Update
ராஜேந்திர பாலாஜி

29-12-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

29 Dec 2021 9 AM

மதுரை ஆவின் முறைகேட்டில் ராஜேந்திர பாலாஜிக்குத் தொடர்பா?!

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

ரூ.3 கோடி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை போலீஸ் தேடிவருகிறது. இந்த நிலையில், மதுரை ஆவின் முறைகேட்டில் ராஜேந்திர பாலாஜிக்குத் தொடர்பா என லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். திருப்பதியில் லட்டு தயாரிக்க நெய் அனுப்பியதில் முறைகேடு நடந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது.

29 Dec 2021 8 AM

அமித் ஷாவைச் சந்திக்கும் தமிழக அனைத்துக்கட்சி எம்.பி-க்கள்!

நீட் தேர்வு
நீட் தேர்வு

டெல்லியில் இன்று தமிழகத்தின் அனைத்துக்கட்சி எம்.பி-க்கள் குழு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து பேசவிருக்கிறது. தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக இந்தச் சந்திப்பு நடைபெறவிருக்கிறது. நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்கொண்ட குழு அமித் ஷாவைச் சந்திக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS