Published:Updated:

Tamil News Today: ஜூலை 18; ``தமிழ்நாடு நாளாகக் கொண்டாட விரைவில் அரசாணை!’’ - முதல்வர் ஸ்டாலின்

30-10-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

30 Oct 2021 11 AM

``ஜூலை 18-ம் தேதியை தமிழ்நாடு நாளாகக் கொண்டாட விரைவில் அரசாணை!’’ - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

`` `தமிழ்நாடு’ எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ம் தேதி இனி `தமிழ்நாடு நாளா’கக் கொண்டாடப்படும்’’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளைப் பரிசீலித்து இந்த முடிவை எடுத்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், ``இது தொடர்பாக விரைவில் அரசாணை வெளியிடப்படும்’’ என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அதே போல், எல்லை போராட்டங்களில் நேரடியாகக் கலந்துகொண்டு சிறைக்குச் சென்ற 100 பேருக்கு தலா 1 லட்சம் ரூபாய் சிறப்புத் தொகையாக வழங்கப்படும் என்றும், அறிவித்திருக்கிறார்.

30 Oct 2021 11 AM

முத்துராமலிங்க தேவர் குருபூஜை - சென்னையில் எடப்பாடி பழனிசாமி மரியாதை!

சென்னையில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
சென்னையில் எடப்பாடி பழனிசாமி மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை, ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையிலுள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வைத்திலிங்கம், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

30 Oct 2021 10 AM

பசும்பொன்னில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், மூர்த்தி, இராஜகண்ணப்பன், பெரியகருப்பன், நவாஸ் கனி ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். முன்னதாக மதுரையில் தேவர் மற்றும் மருது சகோதரர் சிலைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செய்து பசும்பொன்னுக்குப் புறப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

30 Oct 2021 8 AM

மதுரை:  முத்துராமலிங்கனார்- மருது சகோதரர் சிலைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

மதுரை கோரிப்பாளையத்தில் முத்துராமலிங்கனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டு பசும்பொன்னுக்குப் புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

30 Oct 2021 7 AM

தமிழ்நாட்டில் பரவலாக கனமழை!

தமிழ்நாட்டில் பரவலாக பருவமழை பெய்துவருகிறது. வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இரவு முழுவதும் நீடித்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மழை
மழை
வி.ஶ்ரீனிவாசுலு

ராமநாதபுரம், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும், விருதுநகர் மாவட்டத்துக்குப் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு