Tamil News Today: `வங்கக் கடலில் உருவாகிறது புதிய புயல்!’ - இந்திய வானிலை ஆய்வு மையம்
30-11-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!
வங்கக் கடலில் உருவாகிறது புதிய புயல்!
தெற்கு அந்தமான் பகுதியில் தற்போது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறி, பிறகு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, பிறகு புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசாவை நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது!
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை காரணமாக, தொடர் கனமழை பெய்துவருகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவிருப்பதாகவும், அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமான மாறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதற்கிடையே, மழை காரணமாக தூத்துக்குடி, திருவள்ளுர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மவ்வட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, கடலூர், நீலகிரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS