Published:Updated:

Tamil News Today: சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க வேண்டும் - அறிவுறுத்தும் மத்திய அரசு!

ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
Live Update
ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

30-12-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

30 Dec 2021 1 PM

சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க வேண்டும் - அறிவுறுத்தும் மத்திய அரசு!

சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகளை மாநில அரசு கடுமையாக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுதியிருக்கிறது. இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் கடந்த சில தினங்களாக வேகமெடுக்கத் தொடங்கியிருக்கிறது. அதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஒமைக்ரான் பரவல் அதிகமாக இருக்கும் 10 மாநிலங்களுக்கு மத்தியக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.

சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்
சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்

இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், சென்னையில் கடந்த 2 வாரங்களில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார். டிசம்பர் முதல் வாரத்தில் 1,088-ஆக இருந்த நோய்ப்பாதிப்பு எண்ணிக்கை, நான்காவது வாரத்தில் 1,720-ஆக அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். மேலும், சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதால் மாநில அரசு, தடுப்பூசி போடுவது, கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்.

30 Dec 2021 10 AM

மும்பையில் ஜனவரி 7ம் தேதி வரை 144 தடை உத்தரவு!

மும்பை மெரைன் டிரைவ் பகுதி
மும்பை மெரைன் டிரைவ் பகுதி

மும்பையில் கடந்த இரண்டு நாட்களில் கொரோனாவின் தாக்கம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. மும்பையில் ஏற்கனவே புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா அதிகரிப்பு குறித்து மகாராஷ்டிரா அமைச்சர் ஆதித்ய தாக்கரே, மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சிங், மும்பை மேயர் கிஷோரி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மும்பையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை தடுக்க எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு பிறகு மும்பை போலீஸார் வெளியிட்ட அறிவிப்பில் வரும் 7-ம் தேதி வரை மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
30 Dec 2021 9 AM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியாவில் 10ஆயிரத்தைத் தாண்டிய ஒருநாள் பாதிப்பு! 

ஒமைக்ரான்
ஒமைக்ரான்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கடந்த சில வாரங்களாக இந்தியாவில் ஒரு நாள் பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழே பதிவாகிவந்த நிலையில், இன்று பாதிப்பு அளவு, 13,154-ஆகப் பதிவாகியிருக்கிறது. அதே போன்று இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பும் அதிகரித்துவருகிறது. இந்தியாவில், இதுவரை 961 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக டெல்லியில் 263 நபர்களுக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 252 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் 320 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

30 Dec 2021 7 AM

காஷ்மீரில் ஆறு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

காஷ்மீர்
காஷ்மீர்
File Picture

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இரண்டு வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற மோதலில் ஆறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் இரண்டு பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், இன்னும் இருவர் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் எனவும், மீதமிருக்கும் இருவரின் அடையாளங்களைக் கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்றுவருவதாகவும் காஷ்மீர் ஐ.ஜி.பி விஜயகுமார் தெரிவித்தார். காஷ்மீரின் அனந்தநாக், குல்காம் பகுதியில் இந்தத் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.