Published:Updated:

Tamil News Today: சென்னையில் 2 இடங்களில் அதி கனமழை, 6 இடங்களில் மிக கனமழை! - 3 நாள்கள் மழை தொடரும்

சென்னையில் மழை
Live Update
சென்னையில் மழை

31-12-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

31 Dec 2021 8 AM

சென்னையில் இரண்டு இடங்களில் அதி கனமழை பதிவு!

சென்னையில் எதிர்பாராதவிதமாக நேற்று மதியம் முதல் இரவு வரை கனமழை கொட்டித் தீர்த்தது. மிகக் குறைவான நேரத்தில் பெய்த அதீத மழையால், சென்னை நகரின் சாலைகள் எங்கும் தண்ணீர் தேங்கின. மழையால் ஏற்பட்ட மின்கசிவு விபத்துகளால் நேற்று இரவு வரை மூன்று பேர் உயிரிழந்திருக்கின்றனர். மதியம் லேசாகத் தொடங்கிய மழை, மாலை முதல் கனமழையாக மாறியது. சென்னையில் இரண்டு இடங்களில் அதி கனமழை பதிவாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை டிஜிபி அலுவலகம் பகுதியில் 24 செ.மீ., நுங்கம்பாக்கம் பகுதியில் 21 செ.மீ மழையும் பதிவாகியிருக்கிறது. மேலும் ஆறு இடங்களில் மிக கனமழையும் பதிவாகியிருக்கிறது.

மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென இவ்வளவு பெரிய மழை பெய்ததும், இதற்கேற்ற முன்னெச்சரிக்கைகளை ஏன் வானிலை ஆராய்ச்சி மையம் கொடுக்காமல் போனது என்பதுதான் சென்னைவாசிகளின் நேற்றைய கேள்வி. ``மிகக்குறைந்த நேரத்தில் இதுபோல பெய்யக்கூடிய அதிதீவிர மழையை கணிப்பது கடினம்" எனத் தெரிவித்திருக்கின்றனர் வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள். அடுத்த மூன்று நாள்களுக்கும் மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளனர்.