Published:Updated:

Tamil News Today: `வரும் 10,11 தேதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு!' - சென்னை வானிலை ஆய்வு மையம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

08-11-2021 | இன்றைய மழை நிலவரம் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

08 Nov 2021 5 PM

`மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்க்கும் ஒரே குடும்பம் கோபாலபுரம் குடும்பம்தான்!' - அண்ணாமலை

08 Nov 2021 4 PM

மதுரை: வைகை ஆற்றில் கரையைத் தொட்டுச் செல்லும் நீர்!

08 Nov 2021 4 PM

`வரும் 10,11 தேதிகளில்  அதி கனமழைக்கு வாய்ப்பு!' - சென்னை வானிலை ஆய்வு மையம் 

08 Nov 2021 1 PM

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியில்  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்கள் உதவி!

08 Nov 2021 12 PM

மழை வெள்ள பாதிப்புகள் குறித்து வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவிக்கலாம்!

தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து 'TN-SMART' என்ற இணையதளம் மூலமாகவும், 9445869848 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவும் பொதுமக்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம் எனத் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

புகார் தெரிவிக்க:- 'TN-SMART' இணையதளம், வாட்ஸ்அப் எண் - 9445869848.
மழை வெள்ளம்
மழை வெள்ளம்

மேலும், சென்னையில் வடகிழக்குப் பருவமழை தொடர்பான பாதிப்புகளைத் துரிதமாகக் கண்காணித்து நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏதுவாக, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

08 Nov 2021 11 AM

சென்னை வால்டாக்ஸ் சாலையில் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன!

கடலூர் கனமழை:  திருவந்திபுரம் கெடிலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

சென்னை: `கனமழையால் பள்ளிக்கரணை பகுதியைச் சூழ்ந்த மழை வெள்ளம்!' 

புதுச்சேரி : `கனமழை எதிரொலி; சாலையில் ஆறுபோல் ஓடும் மழைநீர்!' 

08 Nov 2021 10 AM

`புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும்!’ - வானிலை ஆய்வு மையம் தகவல்

வானிலை ஆய்வு மையம் தகவல்
வானிலை ஆய்வு மையம் தகவல்

`தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும். நவம்பர் 11-ம் தேதி தமிழகம் நோக்கி நகர்ந்து வரும் என்பதால், அடுத்த ஐந்து நாள்கள் கனமழை தொடரும்' என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

கனமழை: பெருக்கெடுத்த வெள்ளம், அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள்

மதுரை மாவட்டம், பேரையூர் சாப்டூர் அருவியில் குளிக்கச் சென்ற இரண்டு வாலிபர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்கள். மீட்புப் படையினர் நீண்ட நேரத் தேடுதலுக்குப் பிறகு இளைஞர்கள் இருவரின் உடல்களை மீட்டனர்.

அதேபோல, பரவை அருகே வைகை ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த இரண்டு வாலிபர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். மீட்புத் படையினர் அவர்களைத் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.

08 Nov 2021 8 AM

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தொடர் மழையால் கடல்போல் காட்சி அளிக்கும் பேருந்து நிலையம்!

தொடர் மழை காரணமாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தொடர் மழையால் கடல்போல் காட்சி அளிக்கும் பேருந்து நிலையம்

08 Nov 2021 7 AM

தொடரும் கனமழை... பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் பரவலாகப் பருவமழை பெய்துவருகிறது. கடந்த இரண்டு நாள்களாகப் பெய்துவரும் மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் வெள்ளம் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் மாவட்டங்களில் இன்று நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், புதுக்கோட்டை,அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவண்ணாமலை மாவட்டங்களில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் பகுதியில் இயங்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தொடர் மழை காரணமாக இரண்டாவது நாளாகவும் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக, அத்தியாவசிய சேவை வழங்கும் ஆவின், பொதுப் போக்குவரத்து, மின்சாரம், உள்ளாட்சி துறைகள் தவிர்த்து மற்ற அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. தேங்கி நிற்கும் தண்ணீரை மோட்டார் கொண்டு வெளியேற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு