Published:Updated:

`2 வயசு குழந்தைக்கு 70-க்கும் மேல தையல் போட்டிருக்காங்க!'- நாய் கடித்த குழந்தையின் தாய் வேதனை!

குழந்தையுடன் தாய் தமிழரசி
News
குழந்தையுடன் தாய் தமிழரசி

"பெரியவங்களாலேயே அந்த அளவிற்கான வலியைத் தாங்க முடியாது. பச்சப்புள்ள எப்படி தாங்கிட்டு இருந்தான்னு எங்களால நினைச்சுகூட பார்க்க முடியலை!"

நெய்வேலியில் பூங்காவில் விளையாடி கொண்டிருந்த சிறுவனை 4, 5 நாய்கள் சேர்ந்து கடித்துள்ளன. அந்தக் குழந்தைக்குத் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழலில் அந்தக் குழந்தையின் தாய் தமிழரசி, குழந்தையை ஒரு நிமிடம்கூட தனியாக விட்டுவிட்டு செல்லாதீர்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

Baby (Representational Image)
Baby (Representational Image)
Photo by Omar Lopez on Unsplash

'நானும், என் கணவரும் ஓசூரில் பொட்டிக் நடத்திட்டு இருக்கோம். எங்களுடைய பையன் அயான்ஸ் கொஞ்ச நாள் தாத்தா, பாட்டி வீட்டில் இருக்கட்டும்னு நெய்வேலியில் இருக்கிற என் அப்பா, அம்மா வீட்டில் விட்டிருந்தோம். அப்பா தினமும் அவனை வீட்டுப் பக்கத்தில் இருக்கிற பார்க்கிற்கு விளையாட கூட்டிட்டு போவது வழக்கம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

விளையாடிட்டு இருக்கும்போது தண்ணீர் வேணும்னு கேட்டிருக்கான். அப்பாவுக்கு அங்கே நாய்கள் இருக்கிறது தெரியாததனால பார்க்கில் யாரும் இல்லை.. பக்கத்துல தானே வண்டி நிறுத்தியிருக்கோம்.. போய் தண்ணீர் எடுத்துட்டு வந்திடலாம்னு அவனை விளையாட சொல்லி விட்டுட்டு போயிருக்காங்க. திடீர்னு நாய்கள் சத்தமும், தம்பி அழுகிற சத்தமும் கேட்கவும் அப்பா வேகமா போய் பார்த்திருக்காங்க.. தம்பியை 4, 5 நாய் கடிச்சிட்டு இருந்துருக்கு.

Baby - Representative Image
Baby - Representative Image
Photo by Aditya Romansa on Unsplash

நாய்களை விரட்டிவிட்டுட்டு உடனே பக்கத்துல இருக்கிற அரசு மருத்துவமனைக்கு முதலுதவிக்காக கூட்டிட்டு போயிருக்காங்க. ஹாஸ்பிடலில் இருந்து ஃபோன் பண்ணிதான் எங்ககிட்ட தகவல் சொன்னாங்க. என்ன, ஏதுன்னே தெளிவா சொல்லலை. ஏதோ ஆக்ஸிடெண்ட் போல, அதான் உடனே வரச் சொல்றாங்கன்னு நானும், என் கணவரும் ஓசூரில் இருந்து கிளம்பினோம். வழியில் வரும்போது தான் நாய் கடிச்ச விஷயமே எங்களுக்குத் தெரிஞ்சது. இப்படி ஆகியிருக்குமோ, அப்படி ஆகியிருக்குமோன்னு டிராவல் முழுவதும் எங்க ரெண்டு பேருடைய மனநிலையும் இருந்தது. எங்களுக்கு ஆறு மணி நேர டிராவல். ரொம்ப கொடுமையான தருணம் அது. என் கணவர் அழுதுட்டே கார் ஓட்டிட்டு வர்றார். நான் என்ன ஏதுன்னே தெரியாம இறுக்கமான மனநிலையில் உட்கார்ந்துட்டு வர்றேன். எங்க ரெண்டு பேருக்குள்ளேயே என்ன ஆறுதல் சொல்றதுன்னு எங்களுக்கே தெரியலை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாங்க ஆஸ்பத்திரி வர்றதுக்கு முன்னாடியே தம்பியுடைய கண்ணுக்கு மேல பிளாஸ்டிக் சர்ஜரி உடனடியா பண்ணி ஆகணும்னு சர்ஜரி பண்ணிட்டாங்க. அவன் உடம்பில் 70க்கும் மேல தையல் போட்டிருக்காங்க. பெரியவங்களாலேயே அந்த அளவிற்கான வலியைத் தாங்க முடியாது. பச்சப்புள்ள எப்படி தாங்கிட்டு இருந்தான்னு எங்களால நினைச்சு கூட பார்க்க முடியலை.

Baby - Representative Image
Baby - Representative Image

ஆஸ்பத்திரிக்கு வந்ததும் அவன் முகத்தைப் பார்க்கிற தெம்பு என்கிட்ட இல்லை. என் கணவர்தான் தம்பியைப் பார்த்துட்டு வந்து அவன் நல்லா இருக்கான்.. வந்து பாருன்னு சொன்னார். பிறகுதான், நான் அவனை பார்க்கவே போனேன். அத்தனை நாய்கள் சேர்ந்து அடாக் பண்ணினதில் அவன் ரொம்பவே பயந்திருக்கான். அவன் மனநிலை ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கு என்பதை ஒரு அம்மாவாக என்னால உணர முடியுது. எல்லார்கிட்டேயும் கலகலன்னு இருக்கிற பையன் இப்போ அவன் அப்பா, அம்மா, பாட்டியைத் தவிர யார்கிட்டேயும் போக மாட்டேங்கிறான். நம்மளை ஹர்ட் பண்ணத்தான் வராங்கன்னு யாரைப் பார்த்தாலும் பயப்படுறான்.

இன்னும் அவனுக்கு கோர்வையா பேசக்கூட வரலை. ரெண்டு வயசுதான் ஆகுது. நாய்களைப் பார்த்தாலே பயப்படுற பையன். அவனை ஏன் அத்தனை நாய்கள் கடிச்சதுன்னு தெரிஞ்சிக்க சிசிடிவி கேமரா பார்க்க போனோம். ஆனா, அந்த இடத்தில் எந்த சிசிடிவியும் இல்லை. விசாரிக்கும்போதுதான் அந்த பார்க்கில் காலையில் நிறைய நாய்கள் இருக்கும் என்பதும், அதில் ஒரு நாய் எப்பவும் யாரைக் கண்டாலும் கடிக்க வரும் என்பதும் தெரிஞ்சது. பெரியவங்ககிட்ட போகும்போது அவங்க திருப்பி அடிச்சிடுவாங்கன்னு அவங்ககிட்ட நெருங்காம இருந்திருக்கலாம். குழந்தைக்கு என்ன தெரியும்.. இத்தனை நாய்கள் சேர்ந்து ரொம்ப கொடூரமா என் பையனைத் தாக்கியிருக்கு.

Baby care
Baby care

அங்கே செக்யூரிட்டி ஒருத்தர் இருப்பார் போல. அவரும் அந்த டைம்ல பார்க்கில் இல்லை. ஒருவேளை அவர் இருந்திருந்தால் இப்படி ஆகாமல் இருந்திருக்கலாம். 2 வயசு பையனுக்கு சர்ஜரி, தையல் எல்லாம் ரொம்ப அதிகமான வலி. அவனுக்கு இந்த சம்பவத்தை நாங்க நியாபகப்படுத்த விரும்பலை. அதனால, இது தொடர்பா அவன்கிட்ட எதுவுமே பேசலை.

என் அப்பா ரொம்ப குற்ற உணர்ச்சியோட இருக்கார். அவர் அந்த சம்பவத்தை நேரடியா பார்த்ததினால் மன அளவில் அதிகமா கஷ்டப்படுறார். அழுதுட்டே இருக்காரு. என்னால முடிஞ்சவரைக்கும் அவருக்கு சமாதானம் சொல்லிட்டேன். ஆனாலும், அழுதுட்டே தான் இருக்காரு. ரத்தமும், சதையுமா தம்பியை நேரடியா பார்த்ததனால அவன் வலியால துடிக்கும்போது இவர் ரொம்ப துடிச்சு போயிடுறார்.

Baby - Representative Image
Baby - Representative Image
Photo by Kristina Paukshtite from Pexels

யாரும் இந்தத் தப்பை பண்ணிடக்கூடாது. தெரிஞ்ச இடம், தெரிஞ்சவங்க வீடுன்னு எங்கேயும் குழந்தையை தனியா விடக் கூடாது. எங்கே போனாலும், குழந்தையைக் கையோடு கூட்டிட்டு போகணும்னு என்னை மாதிரியான பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தணும் என்கிற நோக்கத்தில்தான் என் குழந்தையோட போட்டோவை எந்தத் தயக்கமும் இல்லாம ஷேர் பண்ணினேன். இந்த மாதிரியான கொடுமையை எந்தக் குழந்தையும் அனுபவிக்க வேண்டாம்!' என்றார்.