Election bannerElection banner
Published:Updated:

தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி முதல் பாலியல் வழக்கில் விசாரணை தொடக்கம் வரை! #NowAtVikatan

தி.மு.க., அ.தி.மு.க
தி.மு.க., அ.தி.மு.க

தமிழகத் தேர்தல் தொடர்பான செய்திகள் மற்றும் லேட்டஸ்ட் செய்திகளின் தொகுப்பு..!

02 Mar 2021 11 AM

தொடங்கியது விசாரணை!

பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் அளித்த பாலியல் புகார் குறித்துத் தனது விசாரணையைத் தொடங்கியது சி.பி.சி.ஐ.டி போலீஸ். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட சி.பி.சி.ஐ.டி எஸ்.பி முத்தரசி விசாரணையைத் தொடங்கினார். பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ் அதிகாரியிடம் சி.பி.சி.ஐ.டி எஸ்.பி முத்தரசி வாக்குமூலம் பெற வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

02 Mar 2021 11 AM

இழுபறிக்குக் காரணம் அ.ம.மு.க?

தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது முதல், கட்சிகள் தங்களின் கூட்டணியை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கின்றன. அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இணைவது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. பிரசாரத்துக்காக தமிழகம் வந்த பா.ஜ.க முன்னாள் தேசியத் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா-வுடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு 25 முதல் 30 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்றும், இது குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அமித் ஷா
அமித் ஷா

அ.தி.மு.க கூட்டணிக்குள் அ.ம.மு.க-வை அழைத்துவர பா.ஜ.க அழுத்தம் தருகிறது என்றும், அதற்கு அ.தி.மு.க தரப்பில் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பான முழுத் தகவல்களை கீழ்க்காணும் லிங்க்கில் படிக்கலாம்.

அமித் ஷா கறார்; அ.தி.மு.க கூட்டணியில் அ.ம.மு.க?! - 3 மணி நேரப் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
02 Mar 2021 11 AM

தி.மு.க - காங்கிரஸ்... ஒப்பந்தம்?

சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் இன்று காலை தொடங்கியது. மறுபுறம் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையிலும் தி.மு.க ஈடுபட்டிருக்கிறது. இன்று கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறது தி.மு.க.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தையில் 20-க்கும் அதிகமான இடங்களை ஒதுக்க தி.மு.க சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தநிலையில், வரும் 6, 7 தேதிகளில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருக்கிறார்.

அ.தி.மு.க மார்ச் 4-ம் தேதி முதல் தனது வேட்பாளர் நேர்காணலை நடத்த முடிவெடுத்திருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு