Election bannerElection banner
Published:Updated:

Election Updates: பென்னாகரத்தில் - ஜி.கே.மணி; ஆத்தூரில் - திலகபாமா: பா.ம.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ம.திலகபாமா, ஜி.கே.மணி
ம.திலகபாமா, ஜி.கே.மணி

தமிழக தேர்தல் தொடர்பான செய்திகளின் தொகுப்பு!

10 Mar 2021 10 PM

தோல்வியில் முடிந்த கூட்டணிப் பேச்சுவார்த்தை?

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இடம் பிடிக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது எஸ்.டி.பி.ஐ. இரண்டு நாட்களாக நிகழ்ந்த  பேச்சுவார்த்தையில் தொகுதி உடன்பாடு எட்டப்படாததால் கூட்டணி முயற்சி தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

10 Mar 2021 10 PM

பா.ம.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் பா.ம.க. யின் 10 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்:-

1. பென்னாகரம் - ஜி.கே.மணி

2. ஆத்தூர் (திண்டுக்கல்) - ம.திலகபாமா

3. கீழ்ப்பென்னாத்தூர் - மீ.கா.செல்வக்குமார்

4. திருப்போரூர் - திருக்கச்சூர் கி. ஆறுமுகம்

5. ஜெயங்கொண்டம் - கே.பாலு

6. ஆற்காடு - கே.எல்.இளவழகன்

7. திருப்பத்தூர் - டி.கே.ராஜா

8. தருமபுரி - எஸ்.பி.வெங்கடேஸ்வரன்

9. சேலம் மேற்கு - இரா.அருள்

10. செஞ்சி - எம்.பி.எஸ்.இராஜேந்திரன்

10 Mar 2021 9 AM

அ.ம.மு.க-வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்!

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், கட்சிகள் தங்கள் கூட்டணியை இறுதிசெய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுவந்தன. விரைவில் வேட்புமனுத்தாக்கல் தொடங்கவிருக்கும் நிலையில் தற்போது கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவதில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றன. இன்று அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என்ற தகவல் வெளியாகியிருந்தது.

இந்தச் சூழலில் இன்று காலை அ.ம.மு.க-வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது. இதைக் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்திருக்கிறார்.

அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க தனது வேட்பாளர் பட்டியலை இன்று 11 மணிக்கு வெளியிடுகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் தி.மு.க வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் தொடர் இழுபறி நீடிப்பதாகவும் தகவல் வெளியாகயுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தொகுதிகள் முடிவடையாமல் இருப்பதால் மாலைக்குள் பேச்சுவார்த்தைகளை முடித்துவிட தி.மு.க அழுத்தம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு