Published:Updated:

ஆண்டு வருமானம் ரூ.2 லட்சம்... வரிக் கணக்கு தாக்கல் செய்யணுமா? - டாக்ஸ் ஃபைலிங் விளக்கம்

டாக்ஸ் ஃபைலிங்
டாக்ஸ் ஃபைலிங்

டாக்ஸ் ஃபைலிங்: வரி வரம்புக்குள் வரவில்லை என்றாலும், கூடுதலாக வரி கட்டி அதைத் திரும்ப பெற வேண்டும் என்றாலும், முதலீடு மூலம் மூலதன இழப்பு ஏற்பட்டு அதை அடுத்துவரும் ஆண்டுகளுக்கு எடுத்துச்செல்ல வேண்டும்

முடிந்த 2019-20-ம் ஆண்டுக்கு என் நிறுவனத்திலிருந்து இன்னும் படிவம் 16 தரவில்லை. நான் எப்படி வரிக் கணக்கு தாக்கல் செய்வது... அதற்கு கெடு தேதி ஏதாவது இருக்கிறதா?

- சொ.பாலகிருஷ்ணன், கூடுவாஞ்சேரி

"வழக்கமாக, ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 31-ம் தேதி வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய தேதி. கோவிட்-19 பரவலால், 2019-20-ம் நிதியாண்டுக்கான தேதி 30.11.2020-ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் படிவம் 16 கொடுக்க வேண்டிய கெடு தேதி இப்போது 2020, ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது."

2019-20-ம் நிதியாண்டில் செய்திருந்த வரிச் சலுகை முதலீடு ஒன்றைக் கணக்கில் காட்ட மறந்துவிட்டேன். அதை இப்போது காட்டி, ரீஃபண்ட் பெற வழி இருக்கிறதா?

- சாந்தினி, ஆறுமுகநேரி

"திருத்தப்பட்ட வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியும். 2019-20–ம் நிதியாண்டுக்கான வருவாயைத் தாக்கல் செய்வதற்கான தேதி 30.11.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், திருத்தப்பட்ட வரிக் கணக்கை 31 மார்ச், 2021 வரை மேற்கொள்ளலாம். எனவே, பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு உரிமை கோர, அந்தத் தேதிக்கு முன் திருத்தப்பட்ட வரிக் கணக்கைத் தாக்கல் செய்துகொள்ளலாம்."

டாக்ஸ் ஃபைலிங்
டாக்ஸ் ஃபைலிங்

யாரெல்லாம் கட்டாயம் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்?

- சந்தியா குமார், நாகர்கோவில்

"பொதுவாக, 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குமேல் இருந்தால், 60 வயது மற்றும் 80-க்குக்கீழ் உள்ள மூத்த குடிமக்களுக்கு ரூ.3 லட்சத்துக்குமேல் இருந்தால், 80 வயதுக்கு மேல் உள்ள மிகவும் மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சத்துக்குமேல் இருந்தால் வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.

ஆனால், வரி வரம்புக்குள் வரவில்லை என்றாலும், கூடுதலாக வரி கட்டி அதைத் திரும்ப பெற வேண்டும் என்றாலும், முதலீடு மூலம் மூலதன இழப்பு ஏற்பட்டு அதை அடுத்துவரும் ஆண்டுகளுக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்றாலும், இந்தியாவுக்கு வெளியே சொத்து ஏதாவது இருக்கிறது என்றாலும், கடன் மற்றும் விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது வரிக் கணக்கு தாக்கல் விவரம் தேவைப்படும் என்றாலும் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்."

எனக்கு பான் கார்டு இருக்கிறது. என் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள்தான். நான் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா?

- சுரேஷ், மத்தளம்பாறை

"உங்களின் வருமானம் நிதியாண்டில் ரூ.2.5 லட்சத்துக்குக்கீழ் இருந்தால், நீங்கள் வரிக் கணக்கு தாக்கல் செய்யத் தேவையில்லை. பான் கார்டு இருக்கிறது என்பதற்காக யாரும் வரிக் கணக்கு தாக்கல் செய்யத் தேவையில்லை. இப்போது பிறந்த குழந்தைக்குக்கூட பான் கார்டு இருக்கிறது."

- நாணயம் விகடன் இதழின் 'கேளுங்கள், பதில் கிடைக்கும்' பகுதியில், வருமான வரிக் கணக்கு தாக்கல் (இன்கம் டாக்ஸ் ரிட்டர்ன்) செய்வது தொடர்பான கேள்விகளுக்கு சென்னையின் முன்னணி ஆடிட்டர்களில் ஒருவரான எஸ்.சதீஷ்குமார் அளித்த பதில்கள் இவை. மேலும் பல சந்தேகங்களுக்கான பதில்களை முழுமையாக அறிய க்ளிக் செய்க... https://bit.ly/3k6kzco > டாக்ஸ் ஃபைலிங் செய்யாவிட்டால் சிறைத் தண்டனையா? - ஆடிட்டரின் விரிவான விளக்கம்..! https://bit.ly/3k6kzco

சிறப்புச் சலுகை:

விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிப்பதுடன், 15 ஆண்டுகால பொக்கிங்களிலும் வலம் வரலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு