Published:Updated:

நெல்லை: முதல்வர் வாகனம் சென்ற வழியில் டீ கிளாஸ் வீச்சு! - பஸ் ஏறித் தப்பிய டீ மாஸ்டர் கைது!

முதல்வர் வாகனம் வந்தபோது...

முதல்வர் வருகை காரணமாக டீக்கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. அந்தச் சமயத்தில் திடீரென ரோட்டின் நடுவே டீ கிளாஸ் விழுந்ததால் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் அதிர்ந்தனர். சம்பவ இடத்தில் தி.மு.க-வினர் திரண்டதால் பரபரப்பு எற்பட்டது.

நெல்லை: முதல்வர் வாகனம் சென்ற வழியில் டீ கிளாஸ் வீச்சு! - பஸ் ஏறித் தப்பிய டீ மாஸ்டர் கைது!

முதல்வர் வருகை காரணமாக டீக்கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. அந்தச் சமயத்தில் திடீரென ரோட்டின் நடுவே டீ கிளாஸ் விழுந்ததால் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் அதிர்ந்தனர். சம்பவ இடத்தில் தி.மு.க-வினர் திரண்டதால் பரபரப்பு எற்பட்டது.

Published:Updated:
முதல்வர் வாகனம் வந்தபோது...

தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரு தினங்கள் தென் மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டிருந்தார். தூத்துக்குடி நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு நேற்று (7-ம்தேதி) குமரி மாவட்ட மழைச்சேத சீரமைப்புப் பணிகளை ஆய்வுசெய்ய சாலை மார்க்கமாக நாகர்கோவில் சென்றார்.

வரவேற்பு அளிக்கக் காத்திருந்த தொண்டர்கள்
வரவேற்பு அளிக்கக் காத்திருந்த தொண்டர்கள்

தமிழக முதல்வரின் வாகனம் வரும் வழியில் நெல்லை மாவட்ட எல்லையில் தி.மு.க-வினர் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்திருந்தனர். அதற்காக காவல்கிணறு எல்லையில் ஏராளமான தி.மு.க-வினர் நெல்லை மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் திரண்டிருந்தார்கள். அந்தச் சாலையில் வரும் முதல்வருக்கு தி.மு.க நிர்வாகிகளும் தொண்டர்களும் வரவேற்பளிக்கக் காத்திருந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதல்வரின் கார் சாலையில் வந்துகொண்டிருந்தபோது காவல்கிணறு விலக்கு பகுதியிலுள்ள ஒரு டீக்கடையிலிருந்து சில்வர் டீ கிளாஸ் ஒன்று சாலையில் வீசப்பட்டது. அதனால் அங்கு காத்திருந்த தி.மு.க தொண்டர்களும் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரும் அதிர்ச்சியடைந்தனர்.

டீ கிளாஸ் வீசிய பாஸ்கர்
டீ கிளாஸ் வீசிய பாஸ்கர்

உடனடியாக அந்தக் கடையை தி.மு.க-வினர் முற்றுகையிட்டனர். போலீஸாரும் சம்பவ இடத்தில் குவிந்தார்கள். நிலைமையின் விபரீதத்தைப் புரிந்துகொண்ட டீ கிளாஸை வீசிய கடையின் டீ மாஸ்டரான பாஸ்கர் என்பவர் சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்தில் தாவி ஏறித் தப்பினார். தி.மு.க-வினரை சமாதானப்படுத்திய போலீஸார், அந்த டீக்கடையை மூடினார்கள்.

போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த டீக்கடை கடந்த ஒரு வாரத்துக்கு முன்புதான் தொடங்கப்பட்டது என்பதும், டீ கிளாஸ் வீசிய பாஸ்கர் என்பவர் இரு தினங்களுக்கு முன்பு மாஸ்டராகப் பணியில் சேர்ந்ததும் தெரியவந்தது. பேருந்தில் தப்பிய பாஸ்கரை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தினார்கள்.

முதல்வர் வாகனம் சென்ற சாலையில் விழுந்த டீ கிளாஸ்
முதல்வர் வாகனம் சென்ற சாலையில் விழுந்த டீ கிளாஸ்

இது தொடர்பாக நெல்லை மாவட்ட காவல்துறை சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ``முதல்வர் வருகை காரணமாக அந்த டீக்கடையில் கூட்டம் அதிகம் இருந்ததால் அங்கு பாதுகாப்புக்கு நின்ற பெண் போலீஸ் ஒருவர் கூட்டத்தைக் கலைத்திருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த பாஸ்கர், டீ கிளாஸை வீசியிருக்கிறார். அதனால் பெண் காவலரைப் பணி செய்யவிடாமல் தடுத்ததற்காக பாஸ்கர் கைதுசெய்யபப்ட்டு சிறையில் அடைக்கப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் வாகனம் சென்ற வழியில் டீ கிளாஸ் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.,